பொருளாதார நெருக்கடியிலிருந்து கிரீûஸ மீட்பதற்கு கடனுதவி அளிப்பதற்கான
புதிய சமரச ஒப்பந்தம் அந்த நாட்டுக்கும், அதற்குக் கடன் வழங்கும் யூரோ
நாணயத்தைப் பொதுவாகப் பயன்படுத்தும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்புக்கும்
(யூரோúஸான்) இடையே திங்கள்கிழமை கையெழுத்தானது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தத்தின் மூலம், அந்தக் கூட்டமைப்பிலிருந்து கிரீஸ் வெளியேற்றப்படும் இக்கட்டான நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் கிரீஸýக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் சர்வதேச கடன் வழங்கும் அமைப்புகள் அளிக்கவிருக்கும் 3-ஆவது கடனுதவி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்டு டஸ்க் கூறியதாவது:
கிரீஸ் பொருளதார நெருக்கடி தொடர்பாக அந்த நாட்டு அரசுக்கும், யூரோ கூட்டமைப்புக்கும் இடையே பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது.
இந்தக் கடனுதவித் திட்டத்தை அமல்படுத்துவதற்கு தற்போது அனைவரும் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் தீவிர பொருளாதாரச் சீர்திருந்தங்களை மேற்கொள்ள கிரீஸ் சம்மதித்துள்ளது என்றார் அவர்.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான கிரீஸ், பல ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
அந்த நெருக்கடியிலிருந்து அந்த நாட்டை மீட்பதற்காக யூரோ கூட்டமைப்பு, ஐரோப்பிய மத்திய வங்கி, பன்னாட்டு நிதியம் ஆகிய அமைப்புகள் கிரீஸýக்கு கடனுதவி அளித்து வந்தன.
அவ்வாறு கடன் அளிப்பதற்கு, சிக்கன நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை கிரீஸ் மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச கடன் வழங்கும் அமைப்புகள் நிபந்தனைகளை விதித்து வருகின்றன.
இந்த நிலையில், கிரீஸில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலில், சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான இடதுசாரிக் கூட்டணி வெற்றி பெற்று, பிரதமர் அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தது.
அதனையடுத்து, பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமல்படுத்த கிரீஸýக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்த நாட்டுக்கு அளிப்பதாக உறுதியளித்த தொகையின் ஒரு பகுதியை சர்வதேச கடன் வழங்கும் அமைப்புகள் நிறுத்தி வைத்தன.
அந்தத் தொகையை விடுவிப்பதற்காக இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச கடன் வழங்கும் அமைப்புகளின் நிபந்தனைகளை ஏற்பதா, வேண்டாமா என்பதை பொது வாக்கெடுப்புக்கு விட பிரதமர் அலெக்ஸில் ஸிப்ராஸ் உத்தரவிட்டார்.
மேலும், வங்கிகள் மூலம் கிரீஸின் நிதிக் கையிருப்பு வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில், அந்த நாட்டின் அனைத்து வங்கிகளையும் மூடுமாறு அவர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், கெடு தேதியான ஜூன் 30-க்குள் பன்னாட்டு நிதியத்தின் கடன் தவணையை கிரீஸால் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும், சர்வதேச கடன் வழங்கும் அமைப்புகளின் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என பொது வாக்கெடுப்பில் பெருவாரியான மக்கள் வாக்களித்தனர்.
இதனால், பொருளாதார வீழ்ச்சியைச் சந்திப்பதுடன், யூரோ கூட்டமைப்பிலிருந்தே வெளியேற்றப்படும் நிலைக்கு கிரீஸ் தள்ளப்பட்டது.
இந்த நிலையில், பொருளாதாரச் சீர்திருத்த விவகாரத்தில் கிரீஸ் அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதைத் தொடர்ந்து, கிரீஸýக்கு 3-ஆவது முறையாகக் கடன் வழங்கும் ஒப்பந்தம் திங்கள்கிழமை கையெழுத்தானது dinamani.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக