சனி, 18 ஜூலை, 2015

நிலத்தை வாங்க ஆள் இல்லை!பணப்புழக்கம் குறைந்துவிட்டது! ஸ்டாலின் கவலை?

கடலூரில் தி.மு.க., நடத்தும் நீதி கேட்கும் பேரணியில் மு.க., ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில்; இன்றைய தமிழகத்தில் நிலம் விற்க பலர் முன் வந்துள்ளனர். ஆனால் நிலத்தை வாங்கிட யாரும் இல்லை. காரணம் பணப்புழக்கம் முடக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்; இந்தக்ககூட்டம் வெற்றி பெற அயராது பாடுபட்ட, ஆரவாரத்தோடு, ஆர்வத்தோடு மிகச்சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ள எம்.ஆர்.கே., பன்னீர்செல்வத்திற்கு பாராட்டுக்கள் தெரிவித்து கொள்கிறேன். இங்கு வந்துள்ள கூட்டத்தை கண்ட நான் பெருமை கொள்கிறேன். இந்த கடலூர் மாவட்டம் பெருமை கொண்டது. ஓமந்தார், வள்ளலார், உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை தந்தது இந்த பூமி. புரட்சி ஏற்பட காரணமாக இருந்த தி.மு.க.,வில் உங்களில் ஒருவனாக நான் மக்களை சந்திப்பதில் பெருமை கொள்கிறேன். நிலத்தை விற்க கூடிய புரோக்கர்கள் என்னை சந்தித்தனர். வீடுகளை விற்க , நிலங்களை விற்க பலர் முன் வருகின்றனர்.
ஆனால் வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லை. பணப்புழக்கம் முடக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு வருமானம் இல்லை. என்று என்னிடம் பலரும் வருத்தம் தெரிவித்தனர். இவர்களுக்கு நான் ஆறுதல் தெரிவித்தேன். விவசாய பிரதிநிதிகள் என்னை சந்தித்தனர். விவசாயம் மடிந்து போச்சு. நிலத்தை விற்கவவாது செய்வோம் என்றால் இதனை வாங்க ஆள் இல்லை. இது போன்று தமிழகம் முழுவதும் இந்த நிலைதான்.


4 ஆண்டுகள் ஆட்சியில் சிக்கி மக்கள் தவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர். ஆனால் உங்கள் ஓட்டுக்களை விலைக்கு வாங்கிட முடியும் என அ.தி.மு.க., வினர் ஆணவத்தில் இருக்கின்றனர்.



நடந்து முடிந்த சட்டசபை தேர்தல், பார்லி., தேர்தல் முடிந்துள்ளது. பிரவீன்குமார் ஆணையராக இருந்தார். இவர் அக்கரமத்திற்கு துணை நின்றார். இப்போது சந்தீப் சக்சேனா, பிரவீன் குமாரை தோற்கடிக்கும் அவர் அக்கிரமத்திற்கு துணை போய் இருக்கிறார். சமீபத்திய இடைத்தேர்தலில் ஓட்டுக்கள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. தொகுதியில் தொடர்பு இல்லாதவர்கள் கள்ள ஓட்டு போட்டனர். நான் கலைஞர் மகன் எதையும் ஆதாரம் இல்லாமல் பேச மாட்டேன். ஓட்டு பட்டியலில் பலர் இறந்து விட்டதாக நீக்கியிருக்கின்றனர். தி.மு.க.,வினர் பெயர்கள் திட்டமிட்டே நீக்கப்பட்டனர். இது போன்ற அக்கிரமங்கள் நடக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார் .தினமலர்.com 

கருத்துகள் இல்லை: