புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை
தொடர்பான வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை ஊர்காவற்றுறை நீதவான்
நீதிமன்றத்தில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையின்போது
புங்குடுதீவில் வைத்து பொதுமக்களின் ஒத்துழைப்போடு கைது செய்யப்பட்ட சுவிஸ்
பிரஜை எவ்வாறு வெள்ளவத்தைக்குச் சென்றார் என்பது தொடர்பான விசாரணை
அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மேலும் நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது
செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் வித்தியா கொலை செய்யப்பட்ட நாளில்
கொழும்பில் இருந்ததாக மன்றில் அளிக்கப்பட்ட வாக்குமூலம் தொடர்பான விசாரணை
அறிக்கையும் இன்று மன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கடந்த மே மாதம் 13 ஆம் திகதி
பாடசாலைக்குச் சென்ற புங்குடுதீவு மாணவி வித்தியா காணாமல் போயிருந்த
நிலையில் மறுநாள் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பாக அன்றைய தினமே அப்பகுதியைச் சேர்ந்த 3 சகோதரர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மேலும் ஐவர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதுதவிர, சுவிசிலிருந்து வந்து இந்த
விவகாரத்துடன் தொடர்புபட்டதாக கூறப்பட்ட ஆசாமி குமார் என்பவனை மக்கள்
பிடித்து தர்மஅடி அடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். எனினும், பொலிசாருக்கு
சாராயம் வாங்கிக் கொடுத்துவிட்டு அவன் வெளியில் வந்து நாட்டைவிட்டு
தப்பிச் செல்லவிருந்த நிலையில் மடக்கிப்பிடிக்கப்பட்டான்.
பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து சென்று
கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் சுற்றித்திரிந்த வேளை பொலிஸாரினால் கைது
செய்யப்பட்டு இவ்வழக்கில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார்.
வித்தியாவின் கொலையால் ஆத்திரமடைந்த
யாழ்.சமூகத்தினர் பல்வேறு இடங்களிலும் பல போராட்டங்களை
முன்னெடுத்திருந்ததால் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இவ்வழக்கு
ஊர்காவற்றுறையில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இவ்வழக்கு கடந்த ஜூன் மாதம்
15 ஆம் திகதி இறுதியாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு
எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ் விசாரணைகளின் போது உயிரிழந்த வித்தியாவின்
தாய், சகோதரன், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி, சட்டவைத்திய
அதிகாரி, சம்பவ இடத்தினை ஆய்வு செய்த பொலிஸார் உள்ளிட்டவர்கள் மன்றில்
வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தனர்.
இவ் விசாரணையின் போது கடந்த 30 நாட்களாக
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டு
விசாரணைக்குட்படுத்தப்பட்ட 9 சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்
செய்யப்படவுள்ளனர்.
இதனிடையே…
கூட்டு வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின்
வழக்கில் ஆஜராகியிருந்த பிரபல சட்டத்தரணி கே.வி.தவராசா, இனி அந்த வழக்கில்
முன்னிலையாக மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களால் நிராகரிக்கப்பட்ட
அரசியல்வாதியும் வியாபாரியுமான ஒருவர், வித்தியாவின் மரணத்தையும் வேறு
சிலருடன் சேர்ந்த வியாபாரமாக்கி விசமத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்
எனக் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இவர்கள் வித்தியாவின் தாய்க்கும்
சகோதரனுக்கும் கொடுத்து வந்த அழுத்தம் காரணமாகவே சட்டத்தரணி தவராசா இந்த
வழக்கில் இருந்து விலகிக்கொண்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கில் முன்னிலையான சட்டத்தரணி
தவராசா வழக்கில் மறைந்துபோன பல மர்மங்கள் வெளிவரக் காரணமாக இருந்தவர்
என்பது குறிப்பிடத்தக்கது. ilakkiyainfo.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக