சனி, 18 ஜூலை, 2015

அரவிந்தர் ஆசிரமவாசி ஹேமலதா உண்ணாவிரதத்தை வாபஸ்பெற்றார்!


ஆசிரம குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட ஹேமலதா தனது உண்ணாவிரதத்தை வாபஸ்பெற்றார்.
தற்கொலை புதுவை அரவிந்தர் ஆசிரம குடியிருப்பில் தங்கியிருந்த ஹேமலதா, நிவேதிதா உள்பட சகோதரிகள் 5 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசிரம குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தங்களை மீண்டும் ஆசிரம குடியிருப்பில் அனுமதிக்கக்கோரி தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் அவர்களது முயற்சி பலிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர்கள் பெற்றோருடன் கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து கடலில் குதித்தனர். இதில் ஹேமலாதாவின் தாய் மற்றும் சகோதரிகள் இருவர் பரிதாபமாக செத்தனர்.அரவிந்தர் ஆஸ்ரமம் ஒரு குண்டா ராஜ்ஜியம்! பெரிய மனிதர்களின் விபச்சாரம் மற்றும் .........

சபாநாயகர் பேச்சுவார்த்தை ஹேமலதா, அவரது தந்தை மற்றும் 2 சகோதரிகள் காப்பாற்றப்பட்டனர். இந்த நிலையில் ஹேமலதா தன்னையும், தனது சகோதரிகளையும் மீண்டும் ஆசிரம குடியிருப்பில் சேர்க்கக்கோரியும், ஆசிரம நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதத்தை கடந்த 13–ந்தேதி தொடங்கினார். நேற்று அவரது உண்ணாவிரதம் 4–வது நாளாக நீடித்தது. அவருக்கு ஆதரவாக சமூக அமைப்பினரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
இந்தநிலையில் சபாநாயகர் சபாபதி நேற்று அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இந்த பேச்சுவார்த்தையில் கலெக்டர் சுந்தரவடிவேலு, ஹேமலதா சார்பில் மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி, மாணவர்–பெற்றோர் சங்க தலைவர் ராஜ்பவன் பாலா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) அப்துல் ரகீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
உண்ணாவிரதம் வாபஸ் அப்போது ஹேமலதாவின் கோரிக்கைகள் தொடர்பாக ஆசிரம நிர்வாகத்துடன் பேசி ஒரு வாரத்திற்குள் முடிவெடுப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஹேமலதாவின் தந்தைக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமும், ஹேமலதா உள்பட 3 சகோதரிகளுக்கும் தலா ரூ.1,500 ஓய்வூதியமும் வழங்க அரசு உத்தரவும் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஹேமலதா தனது உண்ணாவிரதத்தை நேற்று இரவு வாபஸ்பெற்றுக்கொண்டார். அவருக்கு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் இளநீர் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்துவைத்தனர். dailythanthi.com 

கருத்துகள் இல்லை: