புதன், 31 டிசம்பர், 2014

காமுகனை அடிக்க முடியாத ஆத்திரத்தில் காவல் நிலைய வாகனம் எரிப்பு: போலீசார் குவிப்பு பதட்டம் நீடிப்பு

திருவண்ணாமலை சாரோன் பகுதியை சேர்ந்த ஒரு ஆசிரியரின் மகள் சௌமியா ( பெயர் மாற்றம் செய்யபட்டுள்ளது ). திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.29ந்தேதி இரவு டியூஷன் சென்றுவிட்டு இரவு 7 மணியளவில் வீட்டுக்கு நடந்து வந்துள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த இரு இளைஞர்கள் சாரோன் சர்ச் அருகே அந்த பெண்ணை ஆட்டோவில் கடத்திக்கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.செய்துவிட்டு இதை யாரிடமும் சொல்லக்கூடாது என அடித்து உதைத்து எடப்பாளையம் கிராமத்தில் கொண்டு வந்துவிட்டுள்ளனர். அந்த பெண் வீட்டுக்கு செல்கிறாளா அல்லது வேறு எங்காவுது செல்கிறாளா என பின் தொடர்ந்துள்ளனர். அப்போது ஒருவர் பார்த்து எதுக்குடா அந்த பெண்ணை கிண்டல் செய்றிங்க என விரட்டியுள்ளார். அழுதுக்கொண்டே வீட்டுக்கு சென்ற அந்த பெண் தன் பெற்றோரிடம் அதுப்பற்றி முறையிட அவர்கள் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளனர்.


"தீவிர விசாரணையில் தியாகி அண்ணாமலை நகரை சேர்ந்த அஸ்வின் என்பவனும், விநோத் என்பனும் பள்ளி மாணவியை கடத்தி கற்பழித்தது தெரியவந்தது. டாஸ்மாக் கடையில் இருந்த விநோத்தை இரவோடு இரவாக கைது செய்துள்ளனர். அவன் மூலமாக அஸ்வினை வரவைத்து போலிஸ் கைது செய்துள்ளது.விசாரணையில், அஸ்வின் என்பவன் இதற்கு முன் இதேபோன்று ரயில் நிலையத்துக்கு சென்ற சில பெண்களையும், இரவில் பேருந்து நிலையத்தில் தனியாக இருக்கும் பெண்களை கடத்தி சென்றும், காதலனோடு வெளியே செல்லும் காதலிகளை காதலனை அடித்து உதைத்து விரட்டி விட்டு மிரட்டி கற்பழித்தது தெரியவந்துள்ளது.>அந்த நேரத்தில் யார் தன்னுடன் இருக்கிறார்களோ அவர்களை கூட்டாளியாக சேர்த்துக்கொண்டு இந்த காரியத்தை செய்துள்ளான். அவன் மீது வாய்மொழி புகார்கள் இருந்தும் யாரும் மானத்துக்கு பயந்து எழுத்து மூலமாக புகார் தரவில்லை. இதனால் அவன் நிறைய விளையாடியுள்ளான்.

 இந்த மாணவி விவகாரத்தில் புகார் வந்ததும் அவனை கைது செய்துள்ளனர்.விநோத் என்பவன் சிறார் ஜெயிலிலும், அஸ்வின் வேலூர் மத்திய சிறையிலும் அடைக்க முற்பட்டனர்.அஸ்வினை 15 நாள் நீதிமன்றக்காவலில் வைப்பதற்கு முன்னர்,  மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்தனர்.  அப்போது கைது செய்யப்பட்ட அஸ்வினை அடித்து உதைக்க 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் காவல் நிலைய வாசலில் குழுமியிருந்தனர்

பொலீசார் எவ்வளவு சொல்லியும் அவர்கள் போகவில்லை.  மதியத்திலிருந்து இன்று இரவு 10 மணி வரை போலீஸ் நிலைய வாசலிலேயே நின்றனர்.  10 மணிக்கு மேலும் அஸ்வினை போலீசார் வெளியே அழைத்து வராததால், அவனை அடித்து உதைக்க முடியாத ஆத்திரத்தில் காவல்நிலைய ஆட்டோவை தீ வைத்து எரித்தனர். இதனால் பதட்டம் உருவானது.  போலீசார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.  10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.  பதட்டம் குறையாததால் 100 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.- ராஜா nakkheeran.in

கருத்துகள் இல்லை: