வியாழன், 1 ஜனவரி, 2015

அரசியல்வாதிகளிடமிருந்து 197 போலீசாருக்கு கிடைத்தது சுதந்திரம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு, வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்த, 197 போலீ சார், தங்களின் வழக்கமான பணிக்கு திரும்புகின்றனர்.மகாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து, அம்மாநில உள்துறை இணை அமைச்சர் ராம் ஷிண்டே, உயர் போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசித்தார்.
பின், செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:
மகாராஷ்டிராவில், தங்கள் உயிர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஏராளமான அரசியல்வாதிகள், போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில், முந்தைய, காங்கிரஸ் - தேசியவாத காங்., கூட்டணி அரசு, ஏராளமான அரசியல்வாதிகளுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளித்தது.தற்போது நடந்த ஆலோசனையில், குறிப்பிட்ட சில அரசியல்வாதி களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
இதனால், அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்படும். இவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்த போலீசார், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் பணிக்கு அனுப்பப்படுவர். மூத்த குடிமகன்களும், பெண்களும், பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், அரசியல் வாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது தேவையில்லாதது.இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: