ஞாயிறு, 28 டிசம்பர், 2014

AirAsia 4.5 மணி நேரம் பறப்பதற்கு மட்டுமே எரிபொருள் ? 8 மணிநேரம் ஆகியும் தகவல் இல்லை?

ஏர்ஏசியா விமானம் மாயமாகி 8 மணிநேரம் ஆகியும் விமானம் குறித்து எந்தஒரு தகவலும் வெளியாகவில்லை. மீட்பு மற்றும் தேடுதல் பணிக்கு உதவி செய்ய இந்தியா தயார் நிலையில் உள்ளது. இந்தோனேஷியாவின் சுரபயா நகரில் இருந்து அதிகாலை சிங்கப்பூருக்கு 162 பேருடன் புறப்பட்டு சென்ற ஏர்ஏசியாவின் ஏர்-பஸ் A320-200 விமானம் நடுவானில் மாயமானது. காலை 8:30 மணிக்கு சிங்கப்பூர் சென்றடைய வேண்டிய ஏர்ஏசியா விமானம், விமான கட்டுப்பாட்டு அறை தகவல் தொடர்பில் இருந்து விலகியது. காலை 7:24 மணியளவில் விலகி சென்றது. துண்டிப்பை அடுத்து மாயமான ஏர்ஏசியா விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே மாயமான ஏர் ஏசியா விமானம் ஜாவா கடல் பகுதியில் சென்றபோது மாயமானது.


இந்நிலையில் மாயமான ஏர்ஏசியா விமானம் 'மேக மூட்டத்தை தவிர்க்க விமானம் மிகஉயரத்தில் பறக்க கேட்டுக் கொள்ளப்பட்டது' என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சக, விமான கட்டுப்பாட்டு துறை இயக்குநர் ஜோகோ முர்யோ செய்தியாளர்களிடம் பேசுகையில், மேற்கு காலிமான்டான் பகுதியில் பறந்தபோது விமானம் மாயமானது. விமானம் 32 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தது, அப்போது மேக மூட்டத்தை தவிர்க்க 38 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. என்று கூறினார்.

மாயமான விமானத்தில்  சுமார் 4.5 மணி நேரம் பறப்பதற்கு மட்டுமே எரிபொருள் இருந்தது. ஆனால், மாயமாகி 8 மணிநேரம் ஆகியும் விமானம் குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இதற்கிடையே தேடுதல் மற்றும் மீட்பு பணியில் இந்தோனேஷியா இறங்கியுள்ளது. மோசமான வானிலை காரணமாக தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் மாயமான விமானத்தை தேட உதவி செய்ய தயார் என்று அறிவித்துள்ளன. மீட்பு பணியில் சிங்கப்பூர் உதவியை இந்தோனேஷியா ஏற்றுக் கொண்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, நான் அதிகமான பயணிகள் ஊரான சுரபயா நகருக்கு இந்தோனேஷியா அதிகாரிகளுடன் செல்கிறேன். விமானம் தொடர்பாக எங்களுக்கு கிடைத்த தகவலை நாங்கள் தெரிவித்துவிட்டோம். என்னுடைய நினைவுகள் அனைத்தும் பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடனே உள்ளது. நாங்கள் தேடுதல் பணியில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம். என்று ஏர்ஏசியா ஜி.சி.இ.ஒ. ‌டோனி ‌பெ‌ர்​னா‌ண்​ட‌ஸ் தெரிவித்துள்ளார். மாயமான விமானத்தை தேடும் பணியில் உதவி செய்ய இந்தியாவும் தயாராக உள்ளது.

மாயமான ஏர் ஏசியா விமானத்தை தேடுதல் மற்றும் மீட்பு பணிக்கு உதவி செய்ய இந்தியா தனது 3 கப்பல்கள் மற்றும் ஒரு போயிங் பி8-1 ரக விமானத்தையும் தயார் நிலையில் வைத்துள்ளது. அந்தமானில் இருந்து ஒரு கப்பலும், சென்னையில் இருந்து இரண்டு கப்பல்களும் தயார் நிலையில் உள்ளது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

விமானம் மாயமானதை அடுத்து அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் கடும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். விமான நிலையத்தில் தங்களது விருப்பத்திற்குரியவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் பதட்டத்துடன் அழுத வண்ணம் உள்ளனர். அவர்கள் ஏர்ஏசியாவின் செய்தி அறிக்கைக்காக காத்திருக்கிறார்கள். maalaimalar.com

கருத்துகள் இல்லை: