திங்கள், 29 டிசம்பர், 2014

ரயில்வே தொழிலாளர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்ய முடிவு

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.ரயில்வேயில் அந்நிய நேரடி முதலீடு, தனியார்மயம், ஆட்குறைப்பு, 100 சதவீத அக விலைப்படி இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்கம் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்வது பற்றி பெரம்பூர் ஒற்றுமை நிலையத்தில் பணிமனை கோட்ட செயலாளர் எம்.சூரியபிரகாஷ் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இதில் எப்.எப்.ஐ.ஆர். தேசிய தலைவர் குமான்சிங், எஸ்.ஆர்.இ.எஸ் பொதுச் செயலாளர் பி.எஸ்.சூரியபிரகாசம் நிர்வாக தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், பொருளாளர் டி.பார்த்திபன், சந்திரசேகரன், பாபு, பார்த்தசாரதி ஆகியோர் உரையாற்றினார்கள்.

எஸ்.ஆர்.இ.எஸ். தலைவரும், என்.எப்.ஐ.ஆர். பொதுச் செயலாளருமான எம்.ராகவைய்யா பேசும் போது, ரெயில்வே துறையில் அந்நிய நேரடி முதலீட்டை புகுத்துவதால் ஏழை–எளிய மக்கள் எதிர்காலத்தில் ரெயிலில் பயணம் செய்ய முடியாமலும் பாதுகாப்பு கேள்வி குறியாக்குவதுடன் நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும்.

மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து ஜனவரி முதல் நாடு முழுவதும் தொடர் போராட்டங்களும் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் ஏப்ரல் மாதம் நாடு தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். tamil.chennaionline.com

கருத்துகள் இல்லை: