செவ்வாய், 8 ஏப்ரல், 2014

டெல்லியில் மோடியின் பிரசாரம் ரத்து ! டெல்லி மக்களின் ஆதரவை பா.ஜ.க. இழந்துவிட்டது: காங்கிரஸ்

தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெறுவதாக இருந்த மோடியின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், டெல்லி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் ஹரூண் யூசுப் மற்றும் முகேஷ் சர்மா ஆகியோர் கூறுகையில்:- ''நேற்று முன்தினம் தக்சின்புரியில் ராகுல் காந்தி நடத்திய வரலாற்று சிறப்புமிக்க பிரசாரத்தை கண்டு பா.ஜ.க. பயந்து விட்டது. அதனால்தான் ராம்லீலா மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த மோடியின் பிரசார கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி மக்களின் ஆதரவை பா.ஜ.க. இழந்துவிட்டது. பா.ஜ.க. தலைவர்களால் சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட பணம் டெல்லியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 3டி தொழில்நுட்பங்களில் பிரசாரம் செய்தாலும் மக்கள் வர மாட்டார்கள் என்ற பயத்தில்தான் பா.ஜ.க. ராம்லீலா மைதானத்தில் நடக்கவிருந்த பிரசாரத்தை ரத்து செய்துள்ளது. இது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்லை. பா.ஜ.க. தலைவர்கள் தேர்தலுக்காக செலவிடும் இந்த பணத்தை கள்ளச்சந்தையிலிருந்து வசூலித்திருக்கிறார்கள். மக்களின் முன் பா.ஜ.க.வின் உண்மை முகம் தெரிந்துவிட்ட போதிலும் இதுபோன்று கோடிக்கணக்கான பணத்தை பா.ஜ.க. செலவழித்துக் கொண்டிருக்கிறது.'' என்று கூறினர். maalaimalar.com/

கருத்துகள் இல்லை: