வெள்ளி, 11 ஏப்ரல், 2014

சொத்து மதிப்பில் அரசியல்வாதிகளை பின்னுக்கு தள்ளிய நிறுவனங்களின் தலைவர்கள்

புதுடில்லி: எப்போதும் இல்லாத வகையில், லோக்சபா தேர்தலில், பிரபல நிறுவனங்களின் தலைவர்கள், வேட்பாளர்களாக களத்தில் குதித்துள்ளனர். சில தொகுதிகளில், அரசியல் தலைவர்களை விட, நிறுவன தலைவர்களின் சொத்து மதிப்பு, மலைக்க வைக்கிறது.பணக்கார வேட்பாளர்: இம்முறை லோக்சபா தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர்களிலேயே, பணக்கார வேட்பாளராக, முதலிடத்தில் திகழ்பவர், நந்தன் நிலேகனி. 'இன்போசிஸ்' கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனத்தின், அமைப்பாளர்களில் ஒருவரான இவர், பெங்களூரு தெற்கு தொகுதியில், காங்., வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் மற்றும் இவரது மனைவியின் சொத்து மதிப்பு, 7,700 கோடி ரூபாய். நிலேகனியை எதிர்த்து போட்டியிடும், பா.ஜ., வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்தகுமாரின் சொத்து மதிப்பு, 1.22 கோடி ரூபாய் தான். அத்தொகுதியின், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர், நினா நாயக்கின் சொத்து மதிப்பு, 3.5 கோடி ரூபாய். லோக்சபா தேர்தலில், முதல்முறையாக களம் காண்பவர்கள், ஆம் ஆத்மி சார்பில் தான், அதிகம் போட்டியிடுகின்றனர்.
இன்போசிஸ் ல நந்தனுக்கு மட்டும்தான் 7700 கோடி ரூபாய் சம்பாரிக்க மாறி சம்பளம் கொடுத்திருக்காங்க. மத்தவங்களுக்கு பிம்பிளிக்கி பிலாப்பி ...அடுத்த ஆட்சிலே இவர்தான் முதல்லே ஜெயில் க்கு ஆப் ஷோர் வொர்க் பண்ண போறார்
 இதுவரை பின்னணியில் இருந்து இயக்கிவந்தவர்கள் முன்னுக்கு வந்துவிட்டனர் . அவ்வளவுதான் வித்தியாசம் .
வங்கி அதிகாரியாக இருந்து, அரசியல் அரிதாரம் பூசியுள்ள, மீரா சன்யால், மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் சொத்து மதிப்பு, 50 கோடி ரூபாய். இவர், 'ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து' என்ற வங்கியின், முக்கிய நிர்வாகியாக பணியாற்றியவர். மீரா போட்டியிடும் மும்பை தெற்கு தொகுதியில், காங்., சார்பில், பிரபல தொழில் அதிபர் மிலிந்த் தியோராவுக்கு, 43 கோடி ரூபாய் சொத்து உள்ளது. சிவசேனா சார்பில் போட்டியிடும் அரவிந்த் சவந்திற்கு, 1.1 கோடி ரூபாய் சொத்து உள்ளது.


190 கோடி ரூபாய்:

'இன்போசிஸ்' நிறுவனத்தின், முன்னாள் இயக்குனர், வி.பாலகிருஷ்ணன், ஆம் ஆத்மி வேட்பாளராக, பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். இவரின் சொத்து மதிப்பு, 190 கோடி ரூபாய். இத்தொகுதியின் தற்போதைய எம்.பி.,யாக உள்ள, பா.ஜ.,வைச் சேர்ந்த பி.சி.மோகனின் சொத்து மதிப்பு, 30.46 கோடி ரூபாய். காங்., வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத்திற்கு, 3.2 கோடி ரூபாய் சொத்து உள்ளது. அரியானா மாநிலம், குருசேத்ரா தொகுதியின், தற்போதைய எம்.பி.,யும், 'ஜிண்டால்' நிறுவனத்தின் தலைவருமான, நவீன் ஜிண்டால், மீண்டும் இதே தொகுதியில், காங்., வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரின் சொத்து, 300 கோடி ரூபாய். இவரை எதிர்த்து போட்டியிடும், ராஜ்குமார் சாய்னி (பா.ஜ.,) மற்றும் பல்வீந்த் கவுர் (ஆம் ஆத்மி) சொத்து மதிப்பு முறையே, 13.28 கோடி ரூபாய், 1.78 கோடி ரூபாய்.


பீடி தொழில்:

'அமராபாலி' குழும நிர்வாக இயக்குனர் அனில் சர்மா, ஐக்கிய ஜனதா தள வேட்பாளராக, பீகாரின் ஜெகனபாத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரின் சொத்து மதிப்பு, 815 கோடி ரூபாய். இவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களின், சொத்து மதிப்பு தெரியவில்லை. மும்பை வட மத்திய தொகுதியில், பா.ஜ., சார்பில் மறைந்த பிரமோத் மகாஜனின், மகள் பூனம் மகாஜன் போட்டியிடுகிறார். இவரின் சொத்து மதிப்பு, 108 கோடி ரூபாய். இவரை எதிர்க்கும், தற்போதைய எம்.பி., பிரியா தத்திற்கு, 64 கோடி சொத்துள்ளது. இங்கு சமாஜ்வாதி வேட்பாளராக, ஓட்டல் அதிபரான, பர்கான் ஆஸ்மி போட்டியிடுகிறார். இவரின் சொத்து மதிப்பு, 65 கோடி ரூபாய். பீடி தொழிலில், பிரபலமாக உள்ள ஷியாம் சரண் குப்தா, உ.பி., அலகாபாத் தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரை எதிர்க்கும், காங்., வேட்பாளர் நந்த் கோபால் குப்தாவிற்கு, 95 கோடி ரூபாய் சொத்து உள்ளது. ஷியாமுக்கு, 40 கோடி ரூபாய் தான், சொத்து உள்ளது. கோடிகளை, கோடிகளாக பெருக்கும் அரசியல்வாதிகள் மத்தியில், புதிதாக களமிருக்கும் நிறுவனங்களின் பிரபலங்கள், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். dinamalar.com

கருத்துகள் இல்லை: