சனி, 12 ஏப்ரல், 2014

சொந்த தொகுதியிலேயே தம்பிதுரையை ஓட ஓட விரட்டிய மக்கள் ! அமைச்சருக்கும் அர்ச்சனை !

நீ போன முறை தி.மு.க வுக்கு ஓட்டு போட்டியே அப்ப கருணாநிதிகிட்ட தண்ணி கேட்டு வாங்க வேண்டியது தானே என்று அமைச்சர் பதில் சொல்ல,  சுற்றி இருந்த மக்கள் மேலும் சுற்றி வளைக்க அங்கிருந்து தப்பினார்கள் அமைச்சர் விஜயபாஸ்கரும், வேட்பாளர் தம்பிதுரையும்.சொந்த தொகுதியிலேயே அமைச்சரை விரட்டியடித்த பொதுமக்கள்( படங்கள்)
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி கரூர் பாராளு மன்ற தொகுதிக்குள் வருகிறது. கடந்த முறை நின்று வெற்றி பெற்று டெல்லிக்கு சென்ற அ.தி.மு.க தம்பிதுரை தான் இந்த முறையும் இலை சின்னத்தில் வேட்பாளராக போட்டிக்கு நிற்கிறார். இந்த விராலிமலை சட்டமன்ற தொகுதி சுகாதாரதுறை அமைச்சரும் அ.தி.மு.க புதுக்கோட்டை மா.செ வுமான டாக்டர் விஜயபாஸ்கர் நின்று ஜெயித்த சொந்த தொகுதி. இந்த தொகுதிக்குள் தான் வேட்பாளர் தம்பிதுரையும் அமைச்சர் விஜயபாஸ்கரும் நுழைய விடாமல் விரட்டுகிறார்கள் பொதுமக்கள்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு வாணதிரையாண்பட்டி சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்ற போது குடிக்க தண்ணி இல்லாம எதுக்கு வந்தீங்க என்று கேட்க தள்ளுமுள்ளு கல்வீச்சு நடந்து ரத்த காயம் வரை ஏற்பட்டது.அதோடு பிரச்சாரத்தை நிறுத்திய பிரச்சார குழு 31 ந் தேதி மீண்டும் அடுத்த பகுதிக்கு ஓட்டு கேட்டு செல்ல கல்குடி, விட்டமாபட்டி ஆகிய கிராமங்களில் அமைச்சரையும், வேட்பாளரையும் நிறுத்தி வைத்து விட்டார்கள். அத்தோடு பிரச்சாரம் முடித்துக் கொண்டு போனவர்கள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நடிகை விந்தியாவுடன் பிரச்சாரத்துக்கு வர அப்பவும் கல்வீச்சு நடந்தது.
   இப்படி ஒவ்வொரு ஊரிலும் முற்றுகை கல்வீச்சு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று வெள்ளிக் கிழமை அதே சட்டமன்ற தொகுதியில் உள்ள அன்னவாசல் ஒன்றியத்தில் ஓட்டுக்கேட்க புறப்பட்டார்கள்.
    அகரப்பட்டி என்ற கிராமத்தில் வேட்பாளர் வாகனம் வந்து நிற்கும் போது ஒரு பெண் வேகமாக ஓடி வந்தார்.
   வரும் போது நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்டுட்டு வறேன் என்று சொல்லிக் கொண்டே வந்தார்.; அந்த நேரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரும் வேட்பாளர் தம்பிதுரையும் கீழே இறங்க என்னய்யா வேட்பாளரு.. 5 வருசத்துக்கு முன்னால வந்துட்டு போனீங்க. அப்பறம் இப்ப தான் இந்த ஊரு உங்களுக்கு கண்ணுக்கு தெரிஞ்சதா...? எங்களுக்கு குடிக்க தண்ணி இல்லைன்னு தானேய்யா கேட்டோம் கொடுத் தீங்களா..?
    குறுக்கிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்,  உங்களுக்கு காவிரி குடி நீர் கொண்டு வந்து தர்றோம் இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க என்ற சமாதானம் சொல்ல..   அமைச்சரு.. இதை எத்தனை தரம் சொல்லிட்டு போவீக.. சொல்லிட்டு போறதோட தான் போயிடுவிகளே.. என்ற அந்த பெண் பதில் பேச..   நீ போன முறை தி.மு.க வுக்கு ஓட்டு போட்டியே அப்ப கருணாநிதிகிட்ட தண்ணி கேட்டு வாங்க வேண்டியது தானே என்று அமைச்சர் பதில் சொல்ல,  சுற்றி இருந்த மக்கள் மேலும் சுற்றி வளைக்க அங்கிருந்து தப்பினார்கள் அமைச்சர் விஜயபாஸ்கரும், வேட்பாளர் தம்பிதுரையும்.
; கூட வந்த ர.ர.களோ இது அமைச்சர் சொந்த தொகுதின்னு வந்தா மக்கள் இப்படி விரட்டுறாங்க.. கட்சி தலைமை கேட்டா அவங்க தி.மு.க காரங்கன்னு காரணம் வேற சொல்லிக்கிறார் என்றனர். .nakkheeran.in


 

கருத்துகள் இல்லை: