புதன், 9 ஏப்ரல், 2014

மோடி: கேரள மாநிலம் தீவிரவாதிகளை உருவாக்கி வளர்க்கும் நர்சரி !

தீவிரவாதிகளை உருவாக்கி வளர்க்கும் நர்சரி பள்ளிக்கூடமாக கேரள மாநிலம் மாறிவிட்டது என்று நரேந்திர மோடி பசினார். கேரளாவில் நாளை மக்களவை தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. நேற்று கடைசி நாள் என்பதால் கேரளாவில் அனைத்து தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது. காசர்கோட்டில் பாஜ.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கூட்டணி அரசு நமது நாட்டை இருண்ட பாதைக்கு அழைத்து சென்று விட்டது. வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உட்பட பல்வேறு காரணங்களால் இந்திய மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை கூட காங்கிரஸ் கூட்டணி அரசால் நிறைவேற்ற முடியவில்லை. நாட்டின் பாதுகாப்பு காரியங்களில் கூட மத்திய அரசு மிகவும் அலட்சியமாக உள்ளது. நமது எல்லையை கடந்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய வீரர்களை தாக்கியபோது பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக பேசினார். அந்தோணியின் இந்த நடவடிக்கைக்கு நமது ராணுவ அதிகாரிகளே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இந்திய ராணுவத்திடம் உள்ள 95 சதவீத ஆயுதங்கள் மிகவும் பழையவை. நாட்டின் பாதுகாப்பு பொறுப்பை வசிக்கும் அமைச்சர் ஏ.கே.அந்தோ

ணிக்கு இது குறித்து ஏதாவது தெரியுமா என தெரியவில்லை. நாட்டின் கடற்படை தளபதி ராஜினாமா செய்துவிட்டார். புதிய தளபதி இன்னும் நியமிக்கப்படவில்லை. பரந்து விரிந்து கிடக்கும் நமது நாட்டின் கடல் எல்லையை எப்படி பாதுகாக்க போகிறார்கள் என தெரியவில்லை. போர் விமானங்கள் நொறுங்கி விழுகின்றன. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து நாட்டு மக்களுக்கு அந்தோணி தெளிவுபடுத்த வேண்டும். மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நாட்டின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லை. நமது நாட்டுக்கு இப்படி ஒரு ஊனமான அரசு தேவையில்லை. இந்தியாவை

வல்லரசாக்குவதற்கு ஒரு வலிமையான அரசுதான் தேவையாகும். கேரள மாநிலம் சமீப காலமாக தீவிரவாதிகளை உருவாக்கி வளர்க்கும் நர்சரி பள்ளிக்கூடமாக மாறிவிட்டது. சுற்றுலா பயணிகளை அதிகமாக கவரும் மாநிலங்களில் ஒன்றான கேரளா, இப்போது தீவிரவாதிகளை பராமரிக்கும் மாநிலமாக மாறிவிட்டது. சுற்றுலா உட்பட பல்வேறு துறைகளில் கேரள மாநிலத்தால் பல சாதனைகளை படைக்க முடியும். ஆனால், துரதிருஷ்டவசமாக இம்மாநிலம் சமீப காலமாக அனை த்து துறைகளிலும் பின்தங்கி வருகிறது. இவ்வாறு நரேந்திர மோடி பேசினார். dinakaran .com 

கருத்துகள் இல்லை: