வெள்ளி, 11 ஏப்ரல், 2014

குஷ்பு பேட்டி : மக்களிடம் மிகப்பெரிய எழுச்சி இருக்கிறது.


தேர்தல் பிரச்சாரத்தில் நடிகை குஷ்பு.|  
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கொளுத்தும் வெயிலில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார் திமுக-வின் நட்சத்திரப் பேச்சாளர் நடிகை குஷ்பு. பிரச்சாரத்துக்கு நடுவே `தி இந்து’வுக்கு அவர் அளித்த பேட்டி.
பிரச்சாரப் பயணம் எப்படி இருக்கிறது? மக்களிடம் திமுக-வுக்கு வரவேற்பு உள்ளதா?
மக்களிடம் மிகப்பெரிய எழுச்சி இருக்கிறது. மக்களின் அடிப்ப டைக் கட்டமைப்பு வசதிகள், அத்தியாவசியத் தேவைகளில் அரசின் பங்களிப்பு இல்லாதது, மின் வெட்டுப் பிரச்சினை, குடிநீர், சாலை வசதி போன்றவற்றை தற் போதைய அரசு மேற்கொள்ளாதது குறித்து பேசுகிறேன்.
மக்கள் கவனமாகக் கேட் கின்றனர். தனித்தனியாக மக் களைச் சந்தித்தும் பேசுகிறேன். அவர்கள் தங்கள் குறைகளை மனம் விட்டு சொல்கிறார்கள். திமுக மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கட்சித் தலைமை குறித்த உங்களின் கருத்துக்கு திமுக-வுக்குளேயே எதிர்ப்பு கிளம்பியதே.. அதே நிலை இப்போதும் இருக்கிறதா?
நிச்சயமாக இல்லை. கடந்த கால நிகழ்வுகள் கடந்ததாகவே இருக்கட்டும். அதைப்பற்றி இப் போது பேச வேண்டாம்.
நீங்கள் பிரச்சாரத்துக்கு வருவது சந்தேகம் என்றும் திமுக-வில் தொகுதி கிடைக்காமல் அதிப்தி யில் உள்ளதாகவும் செய்திகள் வெளியானதே?
நான் ஏப்ரல் 5-லிருந்து பிரச் சாரம் செய்வதற்கான சுற்றுப் பயணத் திட்டம், அறிவாலயத் திலிருந்து மார்ச் இறுதியிலேயே எனக்கு கிடைத்து விட்டது. அதை முறைப்படி கட்சி அறிவிக்கும் என்பதால், நான் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மற்றபடி கட்சி யுடன் எனக்கு எந்தப் பிரச்சினை யும் இல்லை. நான் எப்போதும் திமுக-வில்தான் இருப்பேன். இதில் மாற்றமில்லை. மற்றபடி, நான் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டேன் என்பதெல்லாம் யூகங் கள். ‘சீட்’ கேட்டு நான் விண்ணப் பம்கூட அளிக்கவில்லை. இதுதான் உண்மை.
ஏன் மற்ற பெண் தலைவர்களை போல், எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் என்று பொறுப்புகளைப் பெற்று, சமூக சேவை செய்ய விருப்பமில்லையா?
சமூகப் பணிகளில் விருப்பமில்லாவிட்டால் அரசியலுக்கே வந்திருக்க மாட்டேன். சமூகப் பணிகளில் ஈடுபடுவதையும் பெரிய பொறுப்புகளுக்கு வருவதையும் அனைத்து அரசியல்வாதிகளும் விரும்புவர். அதைப்போலத்தான் நானும். ஆனால், நான் இப்போது கட்சியின் ஆரம்ப நிலை யிலுள்ள தொண்டர். யாருக்கு, எந்த நேரத்தில் பொறுப்புகள் தரவேண்டும், சீட் தரவேண்டும் என்பதெல்லாம், கட்சித் தலை வரும் தளபதியும் முடிவு செய் வார்கள்.
குறிப்பாக சினிமாத் துறையைச் சேர்ந்த பெண்கள் அரசியலில் நல்ல நிலைக்கு வர முடிவதில்லையே? அவர்களது பிரபலத் தன்மையை அரசியல் கட்சிகள் பயன்படுத்திவிட்டு பிறகு விட்டு விடுகின்றனவே?
மற்ற கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்யும் சினிமாத் துறை பெண் கள், அந்தக் கட்சி உறுப்பினர்களா என்பது தெரியாது. ஆனால், நான் திமுகவில் முறையாக சேர்ந்து, உறுப்பினர் அட்டை பெற்றுள்ளேன்.
அரசியல், சினிமா எல்லா வற்றிலும் பெண்கள் மட்டு மல்ல, அனைவரும் எதிர்நீச்சல் போட்டுத்தான் முன்னேற வேண் டும். கடினமாக உழைத்தால்தான் முன்னுக்கு வரமுடியும். திமுக- வைப் பொறுத்தவரை பெண் களுக்கு உரிய முன்னுரிமை தரப் படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டுமென்று, ஒரு தரப்பினர் விரும்புகின்றனர். பெண் அரசியல்வாதியாக சொல்லுங்கள், பெண்கள் பிரதமராக வருவதை விரும்புகிறீர்களா?
ஜெயலலிதா குறித்து நான் திமுக-வில் இருக்கும் நிலையில் என்னிடம் நீங்கள் இந்த கேள்வியைக் கேட்கக் கூடாது. ஒரு பெண் என்ற முறையில் சொல்கிறேன். ஒரு பெண், நாட்டின் பிரதமராக வந்தால் அது நாட்டுக்கும், பெண்களுக்கும் பெருமைதான். ஆனால், அந்தப் பெண் நாட்டுக்கு நல்லது செய்யக்கூடியவராக இருக்க வேண்டும்.
கடந்த மூன்றாண்டுகளில் முதல்வர் ஜெயலலிதா, மக்கள் நலத் திட்டங்கள் எதையும் செய்யவில்லை. தேர்தல் நெருங் கும் நிலையில், சில இலவசத் திட்டங்களை காட்டினார்கள். கடந்த தேர்தலில் அவர் அளித்த எந்த வாக்குறுதியையும் முழு மையாக நிறைவேற்றவில்லை.
திமுகவி-லிருந்து அழகிரியை நீக்கியது குறித்து என்ன சொல்கிறீர்கள்?
அழகிரி அண்ணன் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை.
திமுகவுக்கு அடுத்த தலைவராக ஸ்டாலின் வருவது சரியாக இருக்குமா? அவர் கட்சி தலை மைப் பதவிக்கு பொருத்த மானவரா?
நிச்சயம் சரியாக இருக்கும். தளபதியின் உழைப்பை யாராலும் குறைசொல்ல முடியாது. அவரது கடின உழைப்பு, கட்சி யிலுள்ள அனைத்து தொண்டர் களுக்கும் தெரியும். அவர் தலைமைப் பதவிக்கு நிச்சயம் பொருத்தமானவர்தான். இது எழுதப்படாத உண்மை.
ஒரு பெண், நாட்டின் பிரதமராக வந்தால் அது நாட்டுக்கும், பெண் களுக்கும் பெருமைதான். ஆனால், அந்தப் பெண் நாட்டுக்கு நல்லது செய்யக்கூடியவராக இருக்க வேண்டும்.  tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: