சென்னை:ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்
சாட்டப்பட்டவர்கள் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பறிமுதல்
செய்யப்பட்ட தங்க, வைர ஆபரணங்கள் உள்ளிட்டவை மற்றும் அவர்களுக்கு சொந்தமான
கம்பெனிகளில் பறிமுதல் செய்யப்பட்ட அசையும் சொத்துகளை விடுவிடுக்க கோரி
சென்னை தனி நீதிமன்றத்தில் கடந்த 1998ம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தள்ளுபடியானது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்யப்பட்டது. இந்த மனு 14 ஆண்டுகளுக்கு பின், நீதிபதி அருணா ஜெகதீசன் முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அசையும் சொத்துகளை திரும்பத் தர கோரி மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள மனுவை முதலில் விசாரணை நடத்திய பின், முக்கிய வழக்கின் இறுதி வாதம் நடத்த வேண்டும் என்று பெங்களூர் நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
தை ஜெயலலிதாவின் வக்கீல் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு தனிநீதிமன்ற நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா, ‘உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்த வழக்கில் சிறப்பு வக்கீல் கர்நாடக உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்தான் இதுதொடர்பான வழக்குகளில் ஆஜராக வேண்டும். அப்படியிருக்கையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட அரசு வக்கீல் தம்பித்துரை எப்படி ஆஜரானார்’ என்று கேள்வி எழுப்பினார். மேலும் அரசு சிறப்பு வக்கீல் பவானி சிங்கை பார்த்து, இது பற்றி உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார். அதற்கு அவர் இல்லை என பதிலளித்தார். இதையடுத்து, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் 5ம் தேதி பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர், ஜெயலலிதாவுக்கு மட்டும் ஆஜராக விலக்கு அளித்தார்.
இதன்பின், 5ம் தேதி சுதாகரன் மட்டுமே ஆஜரானார். சசிகலா, இளவரசி ஆஜராகவில்லை. கோபமடைந்த நீதிபதி, அவர்கள் இருவரும் 7ம் தேதி ஆஜராக வேண்டும் என கண்டிப்புடன் கூறினார். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதி ஜான் மைக்கேல் டிகோனா சரமாரியாக கேள்விகள் கேட்டார்.
‘கடந்த 21&2&14 அன்று நீங்கள் இந்த நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவில், சான்று பொருளாக சேர்க்கப்பட்ட பொருட்களை திருப்பி தர கோரியிருந்தீர்கள். அதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு பற்றி மறைத்தது ஏன்’ என நீதிபதி கேட்டார். அதற்கு சசிகலா பதிலளிக்கையில், ‘இந்த வழக்கை வக்கீல் ஜோதி நடத்தி வந்தார். அவர் திமுகவில் இணைந்து விட்டதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு பற்றி என்னிடம் தெரிவிக்கவில்லை’ என்றார்.
உடனே நீதிபதி, ‘தமிழக லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சம்பந்தத்தை பார்த்து, நீங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு பற்றி நீங்கள் ஏன் தெரிவிக்கவில்லை. அந்த நீதிமன்றத்தில் தனியாக ஒரு அரசு வக்கீலை ஆஜராக வைத்துள்ளீர்கள். இது சரியா? இந்த நீதிமன்றத்தில் ஆஜராகும் அரசு வக்கீல்தான் அங்கும் ஆஜராக வேண்டும் என தெரிந்தும் எப்படி வேறொரு அரசு வக்கீலை நியமிக்கலாம்? இதுபற்றி விளக்கமளிக்க வேண்டும்’ என்று கண்டித்தார். இதன்பின், விசாரணையை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார் - tamilmurasu.org/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக