வியாழன், 27 மார்ச், 2014

10000 கோடியை ஜாமீனாக டெபாசிட் செய்த சஹாரா குழும சுப்ரதா !

முதலீட்டாளர்களிடம் இருந்து விதிமுறைகளை மீறி பணம் திரட்டிய வழக்கில், சுப்ரதா ராயை ஜாமீனில் விடுவிக்க, சஹாரா நிறுவனம் ரூ.10,000 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தர வேண்டிய இந்தத் தொகையை செலுத்துவதற்காக, சஹாரா குழுமத்தின் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை விடுவிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. முதலீட்டாளர்களிடம் இருந்து விதிமுறைகளை மீறி பணம் திரட்டிய வழக்கில், சுப்ரதா ராய் மற்றும் சஹாரா குழுமத்தின் இரண்டு இயக்குனர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜாமீனில் விடுவிக்க சஹாரா நிறுவனம் ரூ.10,000 கோடியை டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும் என்று நிபந்தணை விதித்து உத்தரவிட்டது.


இந்தத் தொகை டெபாசிட் செய்யப்பட்டவுன், சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் ஜாமீனில் விடுவிக்கப்படுவார்.
முன்னதாக, முதலீட்டாளர்களுக்கு ரூ.20,000 கோடியை திருப்பித் தராதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகாத சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்தது. அதையடுத்து கைது செய்யப்பட்ட அவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  dinamani.com

கருத்துகள் இல்லை: