சனி, 8 ஜூன், 2013

ஸ்டாலின் கேள்வி : வைகோ தா. பாண்டியன் ஆகியோரும் சேது சமுத்ரம் பற்றி வாய் திறக்காதது ஏன்?

சேது சமுத்திரத் திட்டம் குறித்து வைகோ, தா. பாண்டியன் ஆகியோர் வாய் திறக் காதது ஏன் என்று மு.க. ஸ்டாலின் கேள்வி விடுத் துள்ளார். மதுரை புறநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் தேர்தல் நிதியளிப்பு பொதுக் கூட்டம் இரவு அய்யர் பங்களா அருகே நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு புறநகர் மாவட்ட செய லாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினிடம் ரூ.2.34 கோடி நிதி வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
சேது சமுத்திரத் திட்டம் தமிழர் களின் 150 ஆண்டு கால கனவு திட்ட மாகும். 2004ஆம் ஆண்டு இதற்கான அடிக்கல் நாட்டு விழா மதுரையில் நடந்தது. விழாவில் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, கலைஞர் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் மட்டுமின்றி வைகோ, கம்யூ. தலைவர் கள் தா. பாண்டியன், வரதராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தின் மூலம் செந்தமிழ் நாடு செழிக்கும் என்று அப்போது வைகோ பேசினார். சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத் தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருக்கிறார். ஆனால் வைகோ வும், தா. பாண்டியனும் இப்போது சேது சமுத்திரம் குறித்து வாய் திறக்க மறுக்கிறார்கள். நாடாளு மன்ற தேர்தலில் ஏதாவது தொகுதி கிடைக்குமா என்று இவர்கள் ஏங்குகிறார்கள்.  அட நீங்க ஒண்ணு அவுங்க நொந்து போய் கிடக்கிராய்ங்க  விட்டுருங்க
கலைஞர் பிறந்த நாள் கடந்த 3ஆம் தேதி கொண்டாப்பட்டபோது சிறீரங்கத்தில் நடந்த விழாவில் ஜெய லலிதா கலந்து கொண்டு என்னைப் பற்றியும், கலைஞர் பற்றியும் கூறி யுள்ளார். இதுபற்றி நாங்கள் ஏதாவது கருத்து தெரிவித்தால் வழக்கு போடுவார்கள். நாங்கள் வழக்கு களுக்கு அஞ்ச மாட்டோம்.
- இவ்வாறு அவர் பேசினார்

கருத்துகள் இல்லை: