சனி, 8 ஜூன், 2013

தலிபான் தலைவரை மறைத்து வைத்திருக்கிறது, பாக். உளவுத்துறை ஐ.எஸ்.ஐ

தலைமறைவாக உள்ள(தாக கூறப்படும்) தலிபான் தலைவர் முல்லா ஓமரை பாதுகாப்பான இடம் ஒன்றில் வைத்துப் பாதுகாக்கிறது, பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.” என்று கூறியுள்ளார், தென்னாசிய விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரி ஒருவர்.
முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரியும், தற்போது ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட் ஆய்வாளருமான புரூஸ் ரிடெல், “கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் தலிபான் தலைமையை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகித்தது, பாகிஸ்தான் உளவுத்துறையும் ராணுவமும்தான்.
தலிபான்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுத்தது, பாக். ராணுவம். தலிபான் தலைமைக்கு புகலிடம் கொடுத்தது, பாக். உளவுத்துறை.
இன்றுகூட அமெரிக்காவால் தேடப்படுவோர் பட்டியலில் உள்ளார் முல்லா ஓமர். அவரையும், மற்றைய தலிபான் தலைவர்களையும் பாதுகாப்பான மறைவிடங்களில் வைத்து பராமரிப்பது, பாக். உளவுத்துறைதான். இந்த மறைவிடங்கள் கராச்சியிலும், குவேட்டாவிலும் உள்ளன” என்று கூறியுள்ளார்.
viruvirupu.com

கருத்துகள் இல்லை: