செவ்வாய், 4 ஜூன், 2013

மதிமாறன் பார்வையில் தமிழக மலையாளிகள், அதிமுக, பார்பனர்கள் ,,,,

திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் தலைவர் கலைஞர் மு. கருணாநிதியையும் பார்ப்பனர்கள் ஆதரிப்பது அரிது.
இத்தனைக்கும் திமுகவோ அதன் தலைவரோ, தங்களை பார்ப்பனர்களுக்கு நெருக்கமானவர்களாகவே காட்டி வருகிறார்கள். அல்லது ‘நாங்கள் பார்ப்பன எதிர்ப்பாளர்களோ, இந்து மத எதிர்ப்பாளர்களோ அல்ல’ என்றும் அறிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இருந்தாலும் அவர்களை ‘அவாளு’க்கு அறவே பிடிப்பதில்லை.
அப்படியும் தேடி பிடித்து பார்த்தால், தனிப்பட்ட முறையில் தலைமையோடு தொடர்பு உள்ளவர்கள், லாபம் அடைந்தவர்கள் என்று ஒன்றிரண்டு பேரையாவது திமுக ஆதரவாளர்களாக பார்ப்பனர்களில் பார்க்க முடிகிறது.
ஆனால் தமிழகம் வாழ் மலையாளிகளில், ஒரே ஒரு திமுக மற்றும் கலைஞர் ஆதரவாளரை பார்ப்பது முடியாததாகவே இருக்கிறது.
திமுக ஆட்சியில் ஓணத்திற்கு தமிழ்நாட்ல லீவெல்லாம் விட்டப் பிறகும் அதே நிலைதான்.
மலையாளிகள் கேரளாவில் காங்கிரஸ், பாஜக, சிபிஎம் என்று பல கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும்; தமிழகத்திற்கு வந்தால், அவர்கள் கருணாநிதி எதிர்ப்பாளர்களாகவும் எம்.ஜி.ஆர் மேல் ஈடுபாடு கொண்டாவர்களாகவும் அண்ணா திமுகவின் ஆதரவாளராகவுமே இருக்கிறார்கள்.
திராவிட இயக்கத்தையும், மலையாளிகளையும் கடுமையாக விமர்சிக்கிற தமிழ்த்தேசியவாதிகளும், தமிழகம் வாழ் மலையாளிகளும் ஒரே மாதிரியான அரசியல் நிலைபாட்டை தமிழகத்தில் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
ஆனாலும் ஆச்சரியமாகவே இருக்கிறது.
சமச்சீர் கல்வி எதிர்ப்பு, தமிழ்வழி கல்வி எதிர்ப்பு, தமிழ்த்தேசிய எதிர்ப்பு, விடுதலைப் புலிகள் எதிர்ப்பு,  மூவரை தூக்கிலிடுவதில் பேரார்வம் காட்டுகிற பார்ப்பனர்கள், பார்ப்பன பத்திரிகைகள் குறிப்பாக தினமணி போன்றவைகளோடு இணைந்து,
திமுக எதிர்ப்பு, கருணாநிதி எதிர்ப்பு ( நல்ல திறமைசாலியா இருக்கேளே..) மற்றும் எம்.ஜி.ஆர் மீது ஈடுபாடு, அண்ணா திமுக ஆதரவு என்று செயல்படுகிற தமிழ்த்தேசியவாதிகள், மலையாளிகளுடன் இணைந்து தமிழ்த்தேசியத்தை வளர்த்தெடுக்காமல் இருப்பது?
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. mathimaran.wordpress.com/

கருத்துகள் இல்லை: