Nawaz Sharif claims victory in landmark Pakistan election
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் நடந்து முடிந்த பார்லி மென்ட் தேர்தலில் நவாஸ் ஷெரிப்பின் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி மொத்தம் உள்ள 272 தொகுதிகளில் 125க்கும் மேல் தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. பெரும்பாண்மைக்கு இன்னும் சில தொகுதிகளே தேவைப்படுகிறது.இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெரிக் இ-இன்சாப் கட்சி 35 இடங்களில் முன்னணி பெற்று 2வது இடத்திலும் முன்னாள் அதிபர் ஷர்தாரியின்பாகிஸ்தான் மக்கள் கட்சி 32 இடங்களிலும் முன்னணி பெற்று 3வது இடத்திலும் உள்ளன.மற்றவை 70 இடங்களிலும் முன்னணியில் உள்ளது.பாகிஸ்தானில் ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றதால் ஓட்டு எண்ணிக்கையில் காலதாமதம் ஆகிறது.இந்நிலையில் இறுதி முடிவு இன்று இரவு அல்லது நாளை தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் நவாஸ் ஷெரீப், இம்ரான்கான் வெற்றி பெற்றனர்.பாகிஸ்தானில் நேற்று பார்லிமென்ட் தேர்தல் நடந்தது.ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் நேற்று மாலை 6 மணியிலிருந்து ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது.இதில் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரிப், சர்ஹோதா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரு தொகுதிகளில் போட்டியிட்டதெரிக் இ-இன்சப் கட்சி தலைவர் பெஷாவரில் இம்ரான் கான் வெற்றி பெற்றார்.லாகூர் தொகுதயில் தோல்வியடைந்தார்.
பார்லிமென்ட் தேர்தல் நேரத்தில் சில தினங்களுக்கு முன் பாகிஸ்தானில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த, "மாஜி' பிரதமர் யூசுப் ரசா கிலானியின் மகன் ஹைதர், அடையாளம் தெரியாத நபர்களால், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். இவரது பாதுகாவலர் மற்றும் செயலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் மகன் அலி ஹைதர், பஞ்சாப் மாகாணத்தின், முல்தான் நகரில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் நடந்த, பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டபோது. அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள், கூட்டத்தினரை நோக்கி, துப்பாக்கியால் சுட்டனர்.இதனால், தொண்டர்கள் அலறியடித்து ஓடினர். மர்ம நபர்கள் சுட்டதில், ஹைதரின் பாதுகாவலரும், செயலரும் கொல்லப்பட்டனர். ஹைதர், துப்பாக்கி முனையில் கடத்தி செல்லப்பட்டார்.இந்த சம்பவத்துக்கு, எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
நேற்று நடந்த ஓட்டுப்பதிவின் போது வெவ்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின.இதில் 10க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்நிலையில் ஓட்டுப்பதிவு நிறைவடைந்து பார்லிமென்ட் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக