சனி, 18 மே, 2013

பயணி i phone பயன்படுத்தியதால் திசைமாறி சென்ற விமானம்!

iPhones on Planes Blamed for Navigation Disruption ... moment where our heading problem was solved,” the unidentified co-pilot told
 விமானப் பயணி ஒருவர் விமானம் பறந்து கொண்டு இருக்கும்போது ஐ-போன் பயன்படுத்தியதால், அமெரிக்க விமானம் ஒன்று பல கி.மீ. திசைமாறி சென்றிருக்கிறது.
புளும்பர்க் வர்த்தக செய்தித்தளம் வெளியிட்டுள்ள இந்த தகவலின்படி, பயணி பயன்படுத்திய ஐ-போன் சிக்னல்கள் விமானத்தின் திசைகாட்டும் கருவியையின் செயல்பாட்டை குழப்பிய காரணத்தாலேயே இந்த நிலை ஏற்பட்டது. அதையடுத்து விமானம் செல்ல வேண்டிய திசையில் இருந்து விலகிச் சென்றிருக்கிறது.
அமெரிக்க விமானத்தின் 9-ம் வரிசை சீட்கள் ஒன்றில் இருந்த பயணி தனது ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதை கவனித்த விமானப் பணியாளர், அதை நிறுத்துமாறு கூறியிருக்கிறார். ஆனால், அதற்குள் போன் சிக்னல்கள் ஏற்படுத்திய தாக்கம், விமானத்தை திசைமாறி செல்ல வைத்துவிட்டது.
விமானத்தில் அதிகளவு எரிபொருள் நிரப்பப்பட்டிருந்த காரணத்தால், மீண்டும் சரியான திசையில் திரும்பி செல்ல வேண்டிய விமான நிலையத்துக்கு செல்லக்கூடியதாக இருந்தது. அதே நேரத்தில், தற்போது அனேக ‘லோ-காஸ்ட்’ விமான நிறுவனங்கள், தமது விமானங்களுக்கு தேவைக்கு அதிகமாக உபரி எரிபொருள் நிரப்புவதில்லை.
viruvirupu.com

கருத்துகள் இல்லை: