தர்மபுரி: பா.ம.க.,வினரிடம் இழப்பீடு பெற, வன்முறை சேதமதிப்பீடு குறித்து,
போலீஸார் பட்டியில் தயார் செய்து வருகின்றனர்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் கைது சம்பவத்தை தொடர்ந்து, தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, 30 தேதி முதல் பா.ம.க.,வினர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இண்டூர், கடத்தூர், பாப்பாரப்பட்டி, உள்ளிட்ட இடங்களில் உள்ள, நான்கு டாஸ்மாக் கடைகளையும், தர்மபுரி அன்னசாகரத்தில், ஒரு ரேசன் கடைக்கும், கொல்லஹள்ளியில் வி.ஏ.ஓ., அலுவலத்துக்கும் தீவைத்து கொளுத்தியுள்ளனர். கிராமங்களுக்கு, இரவு நேரங்களில் பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு, சேலம் போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் பஸ்கள், இரவு நேரத்தில் போலீஸ் பாதுக்கப்புடன் இயக்கப்பட்டு வருகிறது.ராமதாஸ் நேற்று முன்தினம் (மே 11) ஜாமீனில் வெளிவந்த நிலையிலும், தர்மபுரியை அடுத்த பச்சினம்பட்டி, கிட்டம்பட்டி, கடமடைரயில்கேட், புலிகரை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை வன்முறை கும்பல், அரசு பஸ்களின் கண்ணாடியை கல்வீசி தாக்கியது. இதில், 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது:ராமதாஸ், அன்புமணி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, தர்மபுரி மாவட்டம் முழுவதும் கடந்த, 30 ம் தேதி முதல் நேற்று முன்தினம் (மே11) வரை, 53 அரசு பஸ், நான்கு தனியார் பஸ், இரு லாரி, இரு கார்களின் கண்ணாடி என, மொத்தம், 59 வாகனங்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டுள்ளது.
அரசு பஸ், தனியார் பஸ் உள்ளிட்ட வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியது மற்றும் டாஸ்மாக் கடை, ரேஷன் கடை, வி.ஏ.ஓ., அலுவலகம், புளியமரம் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்தியது தொடர்பாக, பா.ம.க.,வினரிடம் இழப்பீடு பெருவது தொடர்பான நடவடிக்களை, மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.இதற்காக மாவட்டம் முழுவதும் பா.ம.க.,வினரின் வன்முறையால் எற்பட்ட சேத மதிப்பீடு, குறித்த விபரங்களையும், வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களையும், மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்க, போலீஸார் பட்டியல் தயாரித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.dinamalar .com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக