மீனாட்சி கோபுரத்தை விட மதுரை நகரில் ஒரு விதிமுறை பல காலமாக அமலில்
உள்ளது. அதாவது குறிப்பிட்ட உயரம் வரைதான் ஒரு கட்டடத்தை எழுப்ப முடியும்.
மதுரை: மதுரையில் அமைக்கப்படவுள்ள தமிழ்த் தாயின் சிலையின் உயரம் எவ்வளவாக
இருக்கும் என்பது மதுரை மக்களின் கியூரியாசிட்டியை தூண்டி
விட்டுள்ளது.ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெருமை. மதுரைக்கு கோவில் பெருமை...
மதுரையை ஆண்டு வருவது மீனாட்சி என்பது மதுரை மக்களின் ஐதீகம். அத்தகைய
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களும்
உலகப் புகழ் பெற்றவையும் கூட.நகரின் எங்கிருந்து பார்த்தாலும் கோபுரங்கள்
தெரியும் வகையிலான உயரம் கொண்டவை அவை. அதிலும் தெற்கு கோபுரம்தான் மிக
உயரமானது. இந்த நிலையில்தான் தமிழ்த் தாயின் சிலை உயரம் குறித்த ஆர்வம்
எழுந்துள்ளது
ஏன் அப்படி? மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள் மக்கள் பார்வையிலிருந்து
மறைந்து விடக் கூடாது. அதை விட உயரமாக எதுவும் இருக்கக் கூடாது என்ற
எணணத்தில்தான் இந்த விதிமுறை பல காலமாக அமலில் உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக