சென்னை: வெளிநாட்டு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக
எழுந்த புகாரைத் தொடர்ந்து சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்ட ஹம்மர் கார் திமுக
பொருளாளர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதியிடம் திருப்பி
கொடுக்கப்பட்டிருக்கிறது.
வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்ததாக கடந்த மார்ச் மாதம் சி.பி.ஐ.
அதிகாரிகள் சென்னையில் மு.க. ஸ்டாலின், அவர் நண்பர் ராஜா சங்கர்
உள்ளிட்டோர் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் ஸ்டாலின் வீட்டில்
இருந்த ஹம்மர் ரக காரை ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் வைத்திருந்தது
தெரியவந்தது. மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க., வெளியேறிய மறுநாளே
நடைபெற்ற இந்த சோதனை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிபிஐ
நடவடிக்கைக்கு மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் எதிர்ப்பு
தெரிவித்திருந்தார்.
பின்னர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அலெக்ஸ் ஜோசப் 480-க்கும் மேற்பட்ட
வெளிநாட்டுக் கார்களை ரூ. 500 கோடி வரி ஏய்ப்பு செய்து, இறக்குமதி செய்து
பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு கொடுத்துள்ளது தெரிய வந்தது. இந்த
வழக்குத் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஜோசப்பை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ஹம்மர் ரக காரை அவர் நுங்கம்பாக்கத்தில்
உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் 2 நாட்களுக்கு முன்பு ஒப்படைத்தார். பின்னர்
காரின் என்ஜின், சேஸிஸ் எண் ஆகியவற்றை பதிவு செய்து கொண்ட சி.பி.ஐ.
அதிகாரிகள் இன்று உதயநிதி ஸ்டாலினிடம் திருப்பிக் கொடுத்தனர்
tamil.oneindia.i
tamil.oneindia.i
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக