திங்கள், 13 மே, 2013

புது நடிகர்களின் சம்பளம் ஏறுது ! இது வெறும் விளம்பர ஸ்டன்ட் என்கிறது சிக்ஸ் சென்ஸ்


ஒரு படம் ஹிட்டாகி விட்டால் தங்கள் சம்பளத்தை ஹீரோக்கள் உயர்த்துவது
வாடிக்கைதான். இப்போதெல்லாம், பெரிய நடிகர்களை விட இளம் ஹீரோக்களின் படங்கள்தான் நன்றாக போவதால், இவர்களது கிராஃப்களும் ஜிவ்!
தமிழ் ஹீரோக்களின் இன்றைய மார்க்கெட் ட்ரென்ட் எப்படி?
விஜய் சேதுபதி ‘பீட்ஸா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’ ஆகிய தொடர் ஹிட்களை கொடுத்தார். முதல் இரண்டு ஹிட்டுக்கு சம்பளத்தை அதிகம் கேட்காமல் இருந்த அவர், இப்போது இரண்டு கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படத்தில் நடிக்க அவர் இந்த சம்பளத்தை கேட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களும் கொடுத்துதான், வளைத்து போட்டிருக்கிறார்கள்.
சிவகார்த்திக்கேயனும், ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர்நீச்சல்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு சம்பளத்தை இரண்டு கோடியாக உயர்த்திவிட்டார். சரி. மற்றைய கோடம்பாக்கம் folks எவ்வளவு கேட்கிறார்கள்? 
விமல், 70 லட்சத்தில் இருந்து 90 லட்சம் ரூபாய் வரை வாங்குகிறார் என்கிறார்கள். இன்னும் ஒரு ஹிட் கொடுத்தால் சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தும் நோக்கில் இருக்கிறாராம்.
‘பரதேசி’ படத்தில் சிறப்பாக நடித்து பாராட்டு பெற்ற அதர்வா, சம்பளமாக ஒன்றரை கோடி ரூபாய் கேட்கிறாராம்.
‘கும்கி’ படத்தில் அறிமுகமான விக்ரம் பிரபு, அந்தப் படத்தின் ஹிட்டுக்குப் பிறகு, ‘இவன் வேற மாதிரி’ படத்தில் நடிக்கிறார். அடுத்த படத்துக்கு சம்பளமாக ஒன்றரை கோடி கேட்டிருக்கிறார்.
‘கடல்’ படத்தில் நடித்துள்ள கவுதம் கார்த்திக், அந்தப் படம் ஊத்திக் கொண்டாலும், அடுத்த படத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம்.
‘தமிழ் படம்’ சிவா, விதார்த் உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் சம்பளமாக 60லிருந்து 80 லட்சம் ரூபாய் வரை கேட்கிறார்கள் என்கிறது கோடம்பாக்கம்.
நடிகர்கள் கோடிகளில் மிதப்பதால், டைரக்டர்கள் தாமே நடிக்க தொடங்கினார்கள். அடுத்து என்ன? தயாரிப்பாளர்கள் மேக்கப் போடவேண்டியதுதான்!ohocinema.com

கருத்துகள் இல்லை: