செவ்வாய், 13 நவம்பர், 2012

Lionair Flight 602 புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: இன்று மீட்பு நடவடிக்கை

The Sri Lanka Navy had discovered the wreckage of a Lion Air Antonov 24 aircraft in the deep seas off Iranathivu Island, 14 years after the plane was shot down by the LTTE using shoulder-fired missiles.
Navy spokesman Commander Kosala Warnakulasuriya said that on a request made by the Terrorists Investigation Division (TID), the Navy had dispatched a group of elite sea divers to the area where the wreckage was said to have been spotted. Thereafter the Navy had surveyed the sea-bed off the Iranathivu Island in the northern sea and located some parts of the plane that we can now confirm came from the Lion Air plane that went down 14 years ago,” he said.
Viruvirupu  புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் ஏர் விமானத்தை கடலில் இருந்து வெளியே எடுக்கும் மீட்பு நடவடிக்கை இன்று ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இலங்கையின் வட பகுதியில் உள்ள இரணதீவிற்கு அருகாமையில் உள்ள கடல் பகுதியில் விடுதலைப் புலிகளால் சுடப்பட்ட விமானம் மூழ்கியுள்ளது. இந்த விமானத்தில் பயணித்த 50 பேர் கொல்லப்பட்டனர். இலங்கை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, கடற்படைச் சுழியோடிகள் விமான இடிபாடுகளை கண்டு பிடித்தனர்.

1998-ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29-ம் தேதி, பலாலி விமான நிலையத்தில் இருந்து, ரத்மலான நோக்கிப் பறந்த லயன் ஏர் தனியார் நிறுவனத்தின் அன்டனோவ் விமானத்தை விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தினர். அதன்பின் இந்த விமானம் கடலடியே கிடந்தது.
கடந்த மாதம் இலங்கை கடற்படைப் செய்தித் தொடர்பாளர் கோசல வர்ணகுலசூரிய, “பாதுகாப்பு அமைச்சிடமிருந்து உரிய அனுமதி கிடைத்தபின், விமானத்தின் பாகங்களை மீட்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
தற்போது தடுப்புக் காவலில் உள்ள விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரிடம் நடத்திய விசாரணைகளின் பின், இந்த விமானத்தை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
எமது ஊகம் சரியாக இருந்தால், புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட இந்த விமானத்தின் ‘போஸ்ட் ஆக்சிடென்ட் கிராஷ்-ரிப்போர்ட்’, தற்போது எதற்கோ தேவைப்படுகிறது.

கருத்துகள் இல்லை: