வியாழன், 15 நவம்பர், 2012

மோடிக்கு எதிராக RSS தலைவர்? கூடாரத்துக்குள் குத்து, வெட்டு?


பார தீய ஜனதாவில் தற் போது கோஷ்டி பூசல் நிலவி வருகிறது. ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்ட நிதின் கட்காரி பாரதீய ஜனதா தலைவர் பதவி யில் இருந்து விலக வேண் டும் என்று எல்.கே. அத்வானி, ராம்ஜெத் மலானி வற்புறுத்தினார் கள். என்றாலும் கட்சி மேலிடம் கட்காரிக்கு ஆதரவாக இருந்தது. தலை வர் பதவியில் இருந்து அவர் விலகமாட்டார் என்று திட்டவட்டமாக அறிவித்தது.
இந்த நிலையில் நிதின் கட்காரிக்கு எதிரான பிரச்சாரத்தில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி செயல்படுகிறார் என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலை வர் வைத்யா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனி யார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- நிதின் கட்காரிக்கு எதிரான பிரசாரம் குஜ ராத்தில் இருந்துதான் தொடங்கி இருக்கிறது. ஏனென்றால் ராம்ஜெத் மலானிதான் நிதின்கட் காரி பதவி விலக வேண்டும் என்றார்.
அவரேதான் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என்று வலி யுறுத்தி உள்ளார். பிரதமர் வேட்பாளர் போட்டியில் தாங்கள் இல்லை என்று எல்.கே. அத்வானியும், நிதின் கட்காரியும் ஏற்கெனவே அறிவித்துவிட்டனர். இதனால் தன்னை வலி மையான வேட்பாளருக் கான லட்சியத்தில் இறங்கியுள்ளார். இந்த பிரச்சினை குறித்து மோடி இதுவரை எதுவும் சொல்ல வில்லை.- இவ்வாறு அவர் கூறினார் http://www.viduthalai.in

கருத்துகள் இல்லை: