வெள்ளி, 16 நவம்பர், 2012

அயர்லாந்தில் சவீதா மரணம்: இந்தியாவுக்கான தூதருக்கு சம்மன்

டெல்லி: அயர்லாந்தில் வயிற்றிலேயே இறந்த கருவை அகற்ற மறுத்ததால் இந்திய பெண் மருத்துவர் சவீதா மரணமடைந்த விவகாரம் தொடர்பாக ஆட்சேபத்தையும் கவலையையும் இந்தியாவுக்கான தூதர் ஃபெலம் மெக்கலனிடம் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவைச் சவீதா பல் மருத்துவராக அயர்லாந்தில் பணியாற்றி வந்தார். அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்த போது திடீரென வயிற்றிலேயே கரு இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று கருவை அகற்றுமாறு கோரினார். ஆனால் சவீதாவின் வயிற்றில் கரு உயிரோடு இருப்பதாகக் கூறி கருவைக் கலைக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. இதற்கு காரணமாக அந்நாட்டின் கருக்கலைப்பு சட்டத்தால் தாங்கள் பாதிக்கபப்டுவோம் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சவீதா நேற்று உயிரிழந்தார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. http://tamil.oneindia.in/

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், வயிற்றில் வளரும் குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் போனால் தாயின் உயிரையாவது காப்பாற்றியிருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்தியாவுக்கான அயர்லாந்து தூதரை நேரில் அழைத்து விசாரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் முடிவு செய்து சம்மன் அனுப்பியது. இதைத் தொடர்ந்து டெல்லி செளத் ப்ளாக்கில் வெளியுறவுத் துறை அமைச்சக செயலர் எம். கணபதியை ஃபெலிம் மெக்கல்லன் இன்று சந்தித்தார். அப்போது இந்தியாவின் ஆட்சேபனையும் கவலையும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
டெல்லியில் போராட்டம்
சவீதாவின் மரணத்துக்கு அயர்லாந்தின் கருக்கலைப்பு சட்டமே காரணம் என்பதால் அதனை மாற்றம் செய்ய வேண்டும் என்று டெல்லியில் இன்று போராட்டம் நடைபெற்றது. டெல்லியில் உள்ள அயர்லாந்து தூதரகத்துக்கு முன்பாக இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

கருத்துகள் இல்லை: