ஞாயிறு, 11 நவம்பர், 2012

கருப்பு பணத்தை சுவிஸ் வங்கியில் போட உதவிய HSBC மீது விசாரணை

இந்தியர்கள் கருப்பு பணத்தை சுவிஸ் வங்கியில் போட உதவிய எச்.எஸ்.பி.சி வங்கி மீது விசாரணை புதுடெல்லி: இந்தியர்களின் கருப்பு பணத்தை சுவிஸ் வங்கியில் போட உதவிய எச்எஸ்பிசி வங்கி மீது விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள எச்.எஸ்.பி.சி வங்கியில் தங்கள் கருப்பு பணத்தை போட்டு வைத்திருந்த இந்தியர்கள் 700 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை பிரான்ஸ் அரசு இந்தியாவிடம் ஒப்படைத்தது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=30702
அதில் இடம் பெற்றிருந்த பெரும் பணக்காரர்களை அரசு பாதுகாப்பதாக சமூக ஆர்வலர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்த இந்தியர்களின் பெயர் பட்டியலை இந்தியாவிடம் பிரான்ஸ் அரசு கடந்த 2011 ஜூனில் ஒப்படைத்தது. அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்கள் மீது வருமான வரி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களிடம் இருந்து, வருமான வரியை வசூலிப்பதோடு, வருமானத்தை மறைத்த குற்றத்துக்காக அபராதமும் விதிக்கப்படுகிறது.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக, எச்எஸ்பிசி வங்கி மீதும் விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.இதற்கிடையே, இந்தியாவில் செயல்படும் தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து நிதி கொண்டு வர எச்எஸ்பிசி வங்கி உதவியதாகவும், இந்த நிதி இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும், எச்எஸ்பிசி வங்கி மீது நிதி மோசடி சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே நேற்று கூறுகையில், ‘தீவிரவாதிகள் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. அவர்கள் இந்தியாவிலும், அண்டை நாடுகளிலும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்துள் ளனர். சர்வதேச அமைப்பில் இருந்து இந்த தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.

கருத்துகள் இல்லை: