செவ்வாய், 13 நவம்பர், 2012

Viswaroopam அமீர் ஓகே சொல்லிவிட்டால் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும்

கமல் இயக்கி நடித்துள்ள படம் விஸ்வரூபம். மேலும் மேலும் பல தொழில்நுட்பங்களை சேர்த்து உலகத்தர படமாக உருவாகிக்கொண்டிருப்பதால் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் விஸ்வரூபம் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. கமலின் பிறந்தநாளன்று ரிலீஸ் செய்யப்பட்ட டிரெய்லர்(AURO 3D) ரசிகர்களிடையே பரபரப்பையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துவிட்ட அதே சமயத்தில் சில சந்தேகங்களையும் எழுப்பிவிட்டது. விஸ்வரூபம் படத்தின் பெரும்பகுதி ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டிருப்பதாலும், டிரெய்லரில் இஸ்லாமியர்கள் துப்பாக்கியுடன் அதிகம் காணப்படுவதாலும், இந்த படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படமாக இருக்குமோ என்ற சந்தேகம் இஸ்லாமியர்களுக்கிடையே எழுந்துள்ளது.
தங்களது சந்தேகத்தை போக்க விஸ்வரூபம் படத்தை தங்களுக்கு திரையிட்டு காண்பித்த பிறகே வெளியிட வேண்டும் என்று பல இஸ்லாமிய அமைப்புகள் சமீபத்தில் கோரிக்கை விடுத்தனர்<சாதாரண விஷயமாக இருந்தாலும் அதை புதிய முறையில் அணுகும் கமல் இந்த பிரச்சனையிலும் புதிய அணுகுமுறையில் செயல்பட்டிருக்கிறார். திரைத்துறையில் முக்கியப் பதவியிலும், பிரபலமாகவும் இருக்கும் இயக்குனர் அமீர் ஒரு இஸ்லாமியர். படத்தைப் பார்த்து அமீர் ஓகே 
சொல்லிவிட்டால் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்று நம்பிய கமல் அமீரை விஸ்வரூபம் படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறாராம்.ஒரு இஸ்லாமியன், இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் செயலுக்கு துணை போகமாட்டான் என்பதால் இந்த பிரச்சனை சுமூகமாக தீர்ந்துவிடும் என்ற நோக்கில் கமல் செயல்பட்டுள்ளாராம். கமலின் பிறந்தநாளன்று நடக்கவிருந்த விஸ்வரூபம் படத்தின் இசைவெளியீட்டு விழா நவம்பர் மாதமே நடந்துவிடும் என்கின்றனர்.

கருத்துகள் இல்லை: