செவ்வாய், 13 நவம்பர், 2012

2ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் விறுவிறுப்பு இல்லை Flop

புதுடில்லி:"2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமங்களுக்கான ஏலம் நேற்று துவங்கியது. இதில், 40 ஆயிரம் கோடி ரூபாயை, எதிர்பார்த்து மத்திய அரசு காத்திருக்கிறது. ஆனால், நேற்று ஏலம் துவங்கி, ஆரம்ப சுற்றுகளில் விறுவிறுப்பு காணப்படவில்லை.வழக்கு:"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை, ஏலம் விடாமல், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டதால், அரசுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக, குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டன.
 இதை தொடர்ந்து, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக ராஜா இருந்த போது, வழங்கப்பட்ட, 122 ஸ்பெக்ட்ரம் உரிமங்களை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. http://www.dinamalar.com/

ஏலம் நடத்திய, உரிமங்களை ஒதுக்கீடு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, ஏலத்தின் மூலம், 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என, மத்திய அரசு எதிர்பார்த்தது.இதன்படி, நேற்று காலை, 9 மணிக்கு துவங்கியது. முதலாவதாக, 1,800 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை வரிசையில் இருந்து துவங்கியது.
இது, தற்போது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் சேவை நடத்திவரும் நிறுவனங்கள் பயன்படுத்துவதுதான். ஐந்து நிறுவனங்கள்:முதல் சுற்று ஏலத்தில் விறுவிறுப்பு காணப்படவில்லை. இதில், பாரதி ஏர்டெல், வோடபோன், டெலிநான் முன்னிலை படுத்தும் டெலிவிங்ஸ், வீடியோகான், ஐடியா செல்லூர் ஆகிய ஐந்து நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றன.

முதல் சுற்று முடிவில், டில்லி, மும்பை, ராஜஸ்தான், கோல்கட்டா ஆகிய மண்டலங்களுக்கு, ஏலம் கேட்க யாரும் முன்வரவில்லை. இரண்டாவது சுற்றில், உ.பி(கிழக்கு) மண்டலத்திற்கும், நான்காவது சுற்று முடிவில் குஜராத் மண்டலத்திற்கும், சிலர் ஆர்வமாக ஏலம் கேட்டனர்.
விலை அதிகம்:பாரதி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் பாரதி மிட்டல், கடந்த வாரம் கூறுகையில்,"" இந்த ஏலம், முதல் நாளோடு முடிந்துவிடும். ஏனென்றால், ஏலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை விலை அதிகமாக உள்ளது'' என்று, கூறியிருந்தார்.

ஏலம் நேற்று காலை, 9:00 மணிக்கு துவங்கி, இரவு, 7:30 மணிவரை நடந்தது. "ஒவ்வொரு சுற்று ஏலமும், பங்கேற்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையை பொறுத்து இருக்கும். நிறுவனங்களுக்கு கால அவகாசம் தேவை என, கோரினால், ஏலம் நேரம் நீடிக்கப்படும் என, தொலைதொடர்பு துறை செயலர் சந்திரசேகர், கூறினார். அவர் மேலும் கூறுகையில்," ஒரு நாளைக்கு, ஆறு அல்லது ஏழு சுற்றுக்கள் நடக்கும். ஏலம் நேரம் முடிந்ததும், ஏலம் தொடர்பான, முழு விவரம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்' என்றார்.

கருத்துகள் இல்லை: