செவ்வாய், 4 செப்டம்பர், 2012

அரசியல் விபசாரம்:ஜெயலலிதா, சீமான், வைகோ, நெடுமாறன்

இலங்கையில் தமிழர் சிங்களர்களிடையே வகுப்பு கலவரம் ஏற்படவேண்டும் என்ற அஜண்டாவில் தமிழக அரசியல்வாதிகள் சிலர் செயல்படுவது நன்றாகவே புரிகிறது. இலங்கையில் ஏற்பட்ட தமிழ் சிங்கள கலவரங்களும் அதனால் ஏற்பட்ட அசாதரணமான சூழ்நிலைகளினால் மட்டுமே முன்னுக்கு வந்த தமிழ அரசியல்வாதிகள் பலர்.அவர்களின் ப்ளாஷ் பாக்குகளை நாம் கிளற வேண்டிய நேரம் வந்துள்ளது.
காங்கிரசால் தூக்கி எறியப்பட்டு குமரி ஆனந்தனோடு பிளவு பட்டு அவர் எதோ காந்தி காமராஜ் காங்கிரஸ் என்று கடை விரிக்க இந்த நெடுமாறனோ காமராஜ் காங்கிரஸ் என்று கடை விரித்து கொள்வாரில்லாமல் போகவே எங்கே போவது என்று அல்லடிக்கொண்டிருக்கையில் அடித்தது ஜாக்பாட்.
இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரம் இவரது காட்டில் பணமாக கொட்டத்தொடங்கியது. பின்பு ஒரே ஏற்றம்தான்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இவருக்கும் சரி சீமான் போன்ற ரௌடிகளுக்கும் சரி மீண்டும் இலங்கையில் கலவரம் வெடிக்காதா என்ற ஏக்கம் வந்துள்ளது. இவர்கள் கூறியது போன்று பூதாகரமான சம்பவங்கள் ஒன்றும் அங்கு நடைபெறவில்லை. அப்படி நடைபெற்றதாக கூறினாலும் புலிகள் செய்த காட்டு மிராண்டி தனத்தோடு அவற்றை ஒப்பீடு செய்ய முடியுமா?

சொந்த சகோதரர்களையே உயிரோடு கொழுத்தியமை பெற்றோரை கொன்று குழந்தைகளை அள்ளிக்கொண்டு போய்  குண்டுகளை கட்டிவிடுதல் இன்னும் வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாத அளவு கொடுரம் புரிந்த பாசிஸ்டுகள்தான் புலிகள் என்பது சுய சிந்தனை உள்ள எவரும் அறிந்த உண்மையாகும்
இலங்கை பற்றி எரிய வேண்டும் அதில் கொழுத்த லாபம் அடைய வேண்டும் என்பதுதான் இந்த பிணம் தின்னி கழுகுகளின் வேட்கையாகும்.
இவர்கள் ஒரு கணமேனும் இலங்கையில் உள்ள சிறு பான்மை மக்களை பற்றி சிந்திப்பார்களேயானால் இந்த மாதிரி இனக்கலவரத்தை தூண்டும் வெறித்தனத்தில் ஈடுபடமாட்டார்கள்.
இவர்களின் இந்த அநாகரீகத்தை செல்வி ஜெயலலிதா பார்த்து கொண்டிருப்பது பரிதாபம். புலிகளும் பிரபாகரனும் அழிக்கப்படவேண்டும் என்று தமிழகத்திலேயே ஜெயலலிதாவும் சுப்ரமணியம் சாமியும் சோவும் தான் மிகவும் தீர்மானத்துடன் இருந்தவர்கள் என்பது ஒன்றும் இரகசியம் அல்ல. ஆனாலும் தற்போது வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில்  காங்கிரசுக்கும் திமுகாவிற்கும் எதிராக இந்த ரௌடிகும்பலின் பிரசாரம் பயன்படும் அல்லது இவர்களின் அடாவடியால் இலங்கையில் இன மோதல் ஏற்பட்டால் அதுவும் கூட அதிமுகாவிற்கு வாக்குகளை பெற்று தரும் என்ற அரசியல் விபசார நோக்கம் தான் ஜெயலலிதாவையும் சீமான் வைகோ நெடுமாறன் போன்றவர்களின் துவேஷ பேச்சுக்களில் தெரிகிறது

கருத்துகள் இல்லை: