ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

தந்தையை சித்திரவதை செய்தார் முக முத்து


கருணாநிதி வசிக்கும் அதே தெருவில் என் மறைந்த நண்பன் முபாரக்கின் சகோதரி பாப்பாத்தியக்கா வீட்டுக்கு(1986ல்) போயிருந்தேன் . எதிர் வீடு முக முத்து வீடு.
அங்கிருந்து கிளம்பும்போது கருணாநிதி வீட்டிலிருந்து வெளியேறிய நபர் முழு போதையில் சட்டை பட்டன் அனைத்தும் திறந்திருந்த நிலையில் நடக்க முடியாமல் நடந்து வந்துகொண்டிருந்தார். முக முத்து ! தன் வீட்டில் நுழைந்த அவர் அங்கே எதிர் வீட்டில் நின்றிருந்த என்னையும் பரூக்கையும் பார்த்துகொண்டே நுழைந்தார். உடனே வெராண்டாவில் உட்கார்ந்தார். உள்ளே இருந்து ஒரு ஆள் அப்போது சாப்பாட்டு தட்டை கொண்டு வந்து வைத்தவுடன் அதிலிருந்த மாமிசத்தை உடல் மடிய குனிந்து ஜவ்வை இழுத்து கடித்து சாப்பிட்டார்.
வீழ்ச்சி என்பதன் முழு படிமம்.

குழந்தையாய் இருக்கும்போது தாயை இழந்து சிறுவனாய் இருக்கும்போது தாயற்ற பிள்ளை அப்பா மீட்டிங் பேசி விட்டு படுக்கும்போது பாட்டியாலும் மாறன் தாயாராலும் வளர்க்கப்பட்ட முத்துதிருவாரூரில் அப்பா அசதி தீர கால் பிடித்து விடுவார. அப்பா அந்த காலத்தில் நூறு ரூபாய் தருவார். முக முத்து சேட்டை செய்தால் அடிக்க கூட தெரியாது. தூசி தட்டுவது போல் இவர் உடம்பில் தட்டி ' சீ ராஸ்கல் ! ராஸ்கல் சீ ' என்பார் !
எழுபதுகளில் கட்சி உடைந்த நிலையில் கருணாநிதி அரசியல் சொல்லடி கல்லடி படும் போதும் அப்போது முக முத்து திமுகவின் அரசியல் எதிரிகளால் அரசியலில் பகடை யாய் உருட்டப்பட்ட போது அவரை புத்திர பாசத்தோடு பாதுகாத்து தன் எதிரிகளை நோக்கி சொன்னார் " பாவம் அவன் ஒரு இளந்தளிர் ! அவனை விட்டு விடுங்கள் !"
அவரின் புத்திர பாசத்திற்கு அக்னி பரீட்சை வைத்து தந்தையை சித்திரவதை செய்ய ஆரம்பித்தார் முக முத்து. ஜெயலலிதா கொடுத்த ஐந்து லட்சத்திற்கு கூட விலைபோனார் என்பது கருணாநிதி எதிர்கொண்ட மிக மோசமான சோகம்.
எம்.ஜி.ஆர் முதல்வராயிருந்தபோதே,ஒரு முறை முத்து கோவித்துக்கொண்டு ராமாவரம் தோட்டத்திற்கு போய்விட்டார். ஆனால் எம்.ஜி.ஆர் அவரை சமாதானப் படுத்தி ‘நான் கலைஞரிடம் பேசுகிறேன்’ என்று திருப்பி அனுப்பி விட்டார்.

பைபிளில் கெட்ட குமாரன் என்று ஒரு கதை உண்டு .
ஒரு வழியாக அவருடைய வனவாசம் முடிந்து வீடு திரும்பிய நிகழ்வை சில மாதங்களுக்கு முன் தமிழ் பத்திரிக்கைகள் அனைத்தும் கொண்டாடின.திருந்திய கெட்ட குமாரன்!
ஆனால் இந்த பத்திரிகைகள் சில விஷயங்கள் பற்றி எந்த கேள்வியும் முன் வைக்கவில்லை.
முக முத்து வின் மனைவி குழந்தைகளோடு அவரை விட்டு பிரிந்த பின் இவர் நடத்திய வாழ்க்கையில் சம்பந்த பட்டவர்கள்.
நெல்லூர் அனுசூயா இவருக்கு வேலைக்காரியாக வந்து இவருக்கு ஒரு பெண் மகவை பெற்ற பின் வீட்டம்மா ஆகியதால் அதன் பின் வேலைக்காரியாக வந்தசீர்காழி பானு வும் இவருக்கு மனைவியாகி பானு இல்லாமல் முத்துவால் வாழவே முடியாது என்ற நிலை முக முத்துவுக்கு ஏற்பட்டது . பானுவும் முக முத்து வும் "மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ ?" பாடி லாயிட்ஸ் காலனி ஹௌசிங் போர்டில் தினமும் அக்கம் பக்கத்தார் கேட்க கச்சேரி நடத்தியது . சிவாஜி கணேசன் இறந்த போது முக முத்து தி நகர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பிராந்திகடையை திறக்க சொல்லி அனுசூயா , பானு வுடன் காரில் வந்து (அழகிரி கொடுத்த கார் !) ரகளை செய்தது -"ஏண்டா சிவாஜி செத்துட்டா உலகமே அழிஞ்சிடுச்சா .கடையை திறந்கடா டே ."

அண்ணாவின் பிரபல நாடகம் . 'வேலைக்காரி ' திரைப்படமாகவும் வந்து அவருக்கு தமிழகத்தின் பெர்னாட் ஷா பட்டம் வாங்கி தந்த வேலைக்காரி காவியம் ! முக முத்து வுக்கு அண்ணா மீது ரொம்ப பிரியம். அதனால் வேலைக்காரி மீதும் !
அனுசூயா முகமுத்து மகள் ஷீபா பீஸ் கட்ட முடியாமல் பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் ஆகிஇருக்கிறாள். அறிவுநிதியின் ஆட்கள் மிரட்டி அடிக்கவும் செய்யும் போது போலீசுக்கும் போக முடியாமல் அனுசூயா மிரண்டு "இவன் கிட்ட சிக்கிகிட்டேன். போதா குறைக்கு நானே எனக்கு ஒரு சக்களத்தியை தேடிகொண்டேன் ' என்று கண்ணீர் விட்ட விஷயம்.

அறிவு நிதிக்கு அப்பா மீண்டும் கிடைத்து விட்டார் . சிதம்பரம் ஜெயராமன் மகளுக்கு புருஷன் திருந்தி விட்டார் . சரி
ஆனால் மற்றொரு தாரம் அனுசூயா,
முக முத்து மகள் ஷீபா
அதற்கு அடுத்த தாரம் பானு
இவர்கள் நிலைமை என்ன ?

அறிவு நிதியின் அப்பா தானே ஷீபாவுக்கு அப்பா !
ஷீபா நிலை பற்றி கனிமொழியின் புரிதல் என்ன ?
கனிமொழியின் தந்தை ஷீபா வாழ்வுக்கு ஏதேனும் தீர்வு கண்டாரா ?

கருத்துகள் இல்லை: