வியாழன், 6 செப்டம்பர், 2012

இந்திய பணயக் கைதிகளை மீட்ட நைஜீரிய கடற்படை

Viruvirupu
டல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட, 23 இந்திய மாலுமிகள் பேர் பணிபுரிந்த ஆயில் டேங்கர் கப்பல், நைஜீரியா கடற்படையால் மீட்கப்பட்டது.
நைஜீரியாவின் தென்மேற்கு மாநிலமான லாகோஸ் துறைமுகம் அருகே வைத்து, இந்த டேங்கர் கப்பல் கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டது. சிங்கப்பூர் கப்பல் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான இந்த டேங்கர் கப்பலை துபாய் நிறுவனம் ஒன்று எண்ணை கொண்டு செல்வதற்காக நீண்ட நாள் வாடகைக்கு அமர்த்தியிருந்தது.
நேற்று பின் மாலைப் பொழுதில் நைஜீரிய கடற்படைக்கு சொந்தமான மூன்று FAC (Fast Attack Craft) ரக படகுகள் ஆயில் டேங்கரை நோக்கி வேகமாக சென்றபடி, வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தின.

வேக தாக்குதல் படகுகளில் பொருத்தப்பட்டுள்ள மீடியம் ரேஞ்ச் ஃபயரிங் வெப்பன் சிஸ்டத்துக்கு ஈடு கொடுக்கும் அளவில் கடல் கொள்ளையரிடம் ஆயுதங்கள் இருக்கவில்லை. இதனால், நைஜீரியா கடற்படையின் படகுகள் நெருங்கும் முன்னரே, கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.
சப் மெஷின்-கன் மற்றும் சில லைட் பயரிங் துப்பாக்கிகளை மட்டுமே கொள்ளையர்கள் வைத்திருந்ததாக, மீட்கப்பட்ட மாலுமிகள் தெரிவித்தனர்.
அதுதான், கடத்திய கப்பலை விட்டுவிட்டு ஓடியிருக்கிறார்கள்!

கருத்துகள் இல்லை: