சனி, 30 ஜூலை, 2011

திருமாவளவன் தி.மு.க. கூட்டணியை விட்டு விலகுவது பற்றி ஆலோசனை:

பா.ம.க. தலைவர் ராமதாஸ் அழைப்பு விடுத்தால், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி, பா.ம.க. கூட்டணியில் சேர்வது பற்றி கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் திருமாவளவன் கூறினார்.சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேராமல், மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்பது எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய யோசனை. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடமும் அதுபற்றி பேசியிருக்கிறேன்.
தற்போது என்னுடைய எண்ணத்தின்படி, பா.ம.க. தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. ராமதாசின் இந்த முடிவை வரவேற்கிறேன். ராமதாஸ் அழைப்பு விடுத்தால், எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து, பா.ம.க. அணியில் சேர்வது பற்றி முடிவு செய்யப்படும் என்றார்.

பாமக விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுகவும் ஒரே அணியில்? ஆஹா நினைத்தாலே இனிக்கும் இனிக்கும் இனிக்கும் என்பது இதுதானோ?
இந்த அணிக்கு புலன் பெயர்களின் காசும் இலவச விளம்பரமும் நிச்சயம் கிடைக்கும் ஆனால் தமிழ் நாட்டு மக்களின் வாக்கு மட்டும் எதிர்பார்க்கும் அளவு கிடைக்காது போகலாம். 
அதனால் என்ன வரும்படிதானே முக்கியம்?
துட்டு இருந்தால் தானே எல்லாம் நடக்கும்.
மூன்று கட்சிகளும் விரைவில் ஒன்று சேர்ந்து ஜெயாவுக்கு பயந்து பயந்து இடை இடையே காதிலே பூசுத்தும் போராட்டகாட்சிகளை அரங்கேற்றட்டும்.
பொழுது போகனும்லே? காகித ஓடம் கடலலை மேலே போவது போலே மூவரும் போவோம்.( பாடல் இடம் பெற்ற படம் மறக்க முடியுமா? இயற்றியவர் கலைஞர்) நன்றி கலைஞர்

கருத்துகள் இல்லை: