புதன், 27 ஜூலை, 2011

அட்டாக் பாண்டி: அழகிரியண்ணனை ஏதோ பெரிய விவகாரத்தில் சிக்க வைக்கத்தான் அ

ஏற்கனவே கைதாகி திருச்சி சிறையில் அடைக் கப்பட்டிருக்கும் அட்டாக் பாண்டியை, கஸ்டடியில் வைத்து விசாரிக்க நீதி மன்றத்தில் அனுமதி கோரி யிருந்தது போலீஸ்.
இந்த வழக்கின் விசா ரணைக்காக 22-ந் தேதி திருச்சியில் இருந்து அட் டாக்கை மதுரை கோர்ட் டுக்குக் கொண்டுவந்தனர் காக்கிகள்.

திருச்சியில் இருந்து கிளம்பும்போது உற்சாகமாகவே கிளம்பிய அட்டாக் பாண்டி, மதுரை வந்து சேர்ந்தபோது முகம் வெளிறிப் போயிருந்தார். இது குறித்து விசாரித்த தனது வழக்கறிஞர்களிடம் ""கொட்டாம்பட்டிக் கிட்ட வரும்போது போலீஸ் வேனை ஒரு ரோட்டோர கேண்டீன் கிட்ட நிறுத்தினாங்க. அப்ப ஐந்தாறு போலீஸ் காரங்க வாட்ட சாட்டமா வேன்ல ஏறி னாங்க. துப்பாக்கியை என் நெத்தியில் வச்சி, "அழகிரிக்காக நீ செய்த கிரிமினல் வேலைகளையெல்லாம் ஒப்பிச்சிடு. இல்லைன்னா போறவழியிலேயே உன்னை என்கவுண்ட்டர் பண்ணிடுவோம்'னு மிரட்டினாங்க.
அப்படி நான் எந்த கிரிமினல் வேலைகளையும் செய்யலைன்னு சொன்னேன். இருந்தும் "அழகிரி அல்லது அவர் மனைவி காந்தி, இல்லைன்னா அவர் மகன் தயாநிதி அழகிரி ஆகியோருக்கு எதிரா நீ வாக்குமூலம் கொடு. உன்னை விட்டுடுறோம்'னு சொன்னாங்க. என்னை விட்ருங்க. நான் எந்தத் தப்பும் பண்ணலைன்னு கெஞ்சினேன். அவங்க விடறமாதிரி இல்லை.

"அப்புறம் சென்னையில் இருந்து முஸ்லிம் துணை நடிகைகள் ரெண்டுபேரை பொட்டு வரவச்சாரே ஞாபகம் இருக்கா? தல்லாகுளம் ஸ்டார் ஓட்டல்ல அவர் ரூம்போட்டு தங்க வச்சாரே ஞாபகம் இருக்கா? போதையில் செக்ஸ் பண்ணுவதற்காக பெத்தடின் ஊசி மருந்தை அதிக அளவில் ஏத்தியதால் அதில் ஒரு பொண்ணு செத்துப்போச்சே அதாவது ஞாபகம் இருக்கா. செத்துப்போன அந்தப் பொண்ணின் பாடியை நீயும் கரிமேடு டீமும் கொண்டுபோய் கொடைக்கானல் மலையில் இருந்து உருட்டிவிட்டீங்களே அதாவது ஞாபகம் இருக்கா'ன்னு துருவித் துருவிக் கேட்டாங்க. சத்தியமா எல்லாமே பொய்யுன்னு சொன்னேன். ஏதேதோ ஃபைல்களில் கையெழுத்துக் கேட்டாங்க. உசுரே போனாலும் பரவால்ல பொய் வாக்குமூலம் கொடுக்கமாட்டேன்னு சொல்லி, கடைசிவரை நான் கையெழுத்து போடலை. அழகிரியண்ணனை ஏதோ பெரிய விவகாரத்தில் சிக்க வைக்கத்தான் அவங்க இப்படி பண்றாங்கன்னு தெரியுது. இதை அண்ணன் காதுக்குக் கொண்டுபோங்க. என்னையும் கூடிய சீக்கிரம் போட்டுத் தள்ளிடுவாங்க போலிருக்கு'' என ஏகத்துக்கும் முகம் வியர்த்துப் போனார். இவர்மீதும் குண்டாஸ் பாய ஃபைல் ரெடியாகிக் கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: