வெள்ளி, 29 ஜூலை, 2011

சிங்கப்பூர் பெரிய தொழிலதிபர்கள் பட்டியலில் இந்தியர்கள் மூவர்

சிங்கப்பூரில் உள்ள, மிகப் பெரிய தொழிலதிபர்கள் பட்டியலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர். சிங்கப்பூரில், பெரியளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள, தொழில் அதிபர்கள், 40 பேரின் பட்டியலை, "போர்ப்ஸ் ஆசியா' பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த 40 பேரின், மொத்த சொத்து மதிப்பு, 2.5 லட்சம் கோடி ரூபாய். இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர். சிங்கப்பூர் உள்ளிட்ட பல இடங்களில், தங்க நகை வியாபார கடைகளை நடத்தி வரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, முஸ்தபா அகமது, இந்த பட்டியலில், 37வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு தொழில் அதிபர், விவியன் சந்திரன், இந்த பட்டியலில், 38வது இடத்தை பிடித்துள்ளார். இவர், சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு, "சீமாயில்'என்ற, கடல் சார் எரிவாயு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த பட்டியலில், 40 வது இடத்தை பிடித்துள்ள இந்தியர், ஜார்ஜ் வர்கீஸ். ஆலம் இன்டர்நேஷனல் என்ற, விவசாய பொருட்களை விற்பனை செய்து வரும் நிறுவனத்தை, நடத்தி வருகிறார். இந்த பட்டியலில், முதல் இடத்தை பிடித்துள்ளது, சிங்கப்பூரின் பிரபலமான, டெங் போங் குழுமம்

கருத்துகள் இல்லை: