வெள்ளி, 29 ஜூலை, 2011

ஹெபடைடிஸ் பி கல்லீரல் நோய்த் தடுப்பூசி இலவசம்: அமைச்சர் வி.எஸ். விஜய்


உலக கல்லீரல் நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லீரல் மருத்துவத் துறைத் தலைவர் கி.நாராயணசாமி தொகுத்த "ஹெபடைடிஸ் பி நேற்று-இன்று-நாளை?' புத்தகத்தை வெ
சென்னை, ஜூலை 28: கல்லீரல் நோய்க்கான தடுப்பூசியை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக போட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ். விஜய் தெரிவித்தார்.உலக கல்லீரல் நோய் விழிப்புணர்வு தினம் சென்னை மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-
 
""உலக மக்கள் தொகையில் 200 கோடி பேர் கல்லீரல் நோயால் (ஹெபடைடிஸ் பி) பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 40 கோடி பேர் மிக நீண்ட காலமாக இந்த நோய் பாதிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 50 லட்சம் பேருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.கல்லீரல் நோய் மற்ற அனைத்து நோய்களைக் காட்டிலும் மிகக் கொடியதாகும். இது எளிதில் பரவக்கூடிய நோயாகவும் இருப்பதால் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். மற்ற நோய்களைப் போல் அல்லாமல் கல்லீரல் நோய்க்கு எந்தவித அறிகுறியும் இருக்காது. நோய் முற்றிய பின்னரே பாதிப்பு தெரியவரும்.இந்த நோய் பாதிப்பு இருப்பது நாட்பட்டு கண்டறியப்பட்டாலும் இதனை முற்றிலும் ஒழிப்பது கடினம். சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தான நிலைக்குக் கொண்டு சென்றுவிடும். எனவே நோய் பாதிப்பை முன்னரே கண்டறியும் வகையில் சென்னை அரசு பொது மருத்துவமனை சார்பாக நகரின் பல்வேறு பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு மொத்தம் 1,297 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 44 பேருக்கு ஹெபடைடிஸ் வைரஸ் கிருமி தாக்குதலும், 17 பேருக்கு ஹெபடைடிஸ் சி கிருமி தாக்குதல் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுóள்ளது. கல்லீரல் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் சுகாதாரத் துறையின் சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது.கல்லீரல் நோய் வராமல் இருக்க தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி போடும் நடவடிக்கைகளும் எடுக்கப்படும்'' என்றார் அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய். சென்னையின் பல்வேறு இடங்களில் அரசு பொது மருத்துவமனை சார்பில் ஹெபடைடிஸ் பி வைரஸ் நோய் கண்டறியும் முகாமைத் தொடர்ந்து நடத்தி, இலவச தடுப்பூசி மருந்து போட திட்டமிடப்பட்டு வருகிறது என்றார் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் வி.கனகசபை.சட்டப்பேரவை உறுப்பினர் பழ. கருப்பையா, நாடாளுமன்ற உறுப்பினர் பாலகங்கா, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பழனி, மருத்துவக் கல்வி (இந்திய மருத்துவக் கவுன்சில் பிரிவு) துணை இயக்குநர் டாக்டர் என்.முத்துராஜன், கல்லீரல் நோய் சிகிச்சைத் துறையின் தலைவர் டாக்டர் நாராயணசாமி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: