வியாழன், 28 ஜூலை, 2011

சஞ்சய் தத் மேடையில் நடிப்பதை விட சினிமாவில் நடிப்பது நல்லது

மேடையில் நடிப்பதை விட, சினிமாவில் நடிப்பதே நல்லது என்பதை புரிந்து கொண்டேன். இனிமேல், அரசியலுக்கு வரவே மாட்டேன்’’ என்று நடிகர் சஞ்சய் தத் அலறியுள்ளார். அமர்சிங்கின் நெருங்கிய நண்பரான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அவர் கேட்டுக் கொண்டதால் சில ஆண்டுகளுக்கு முன்பு முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார்.

உத்தர பிரதேச  சட்டப்பேரவை தேர்தலிலும், மக்களவை தேர்தலிலும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் களை ஆதரித்து பிரசாரம் செய்தார். இந்த நிலையில், முலாயம் சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சமாஜ்வாடி கட்சியில் இருந்து அமர்சிங் விலகினார்.  இதைத் தொடர்ந்து, சஞ்சய் தத்தும் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது பற்றி தொலைக்காட்சி ஒன்றில் சஞ்சய் தத் கூறியதாவது;

அரசியலில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன். தயவு செய்து என்னை யாரும் அரசியல் பக்கம் இழுக்க வேண்டாம். அரசியலுக்கு திரும்பி வருவது பற்றி என்னால் நினைத்து பார்க்க கூட முடியாது. நான் மூன்று மாதம் உ.பி.யில் இருந்தேன். அங்கு நடந்த எல்லா விஷயங்களையும் நேரில் பார்த்து அறிந்த பிறகுதான், மேடையில் நடிப்பதை விட சினிமாவில் நடிப்பது நல்லது என்பதை புரிந்து கொண்டேன். இதுவரை பட்டதே போதும். நிச்சயமாக இனிமேல் அரசியலுக்கு வரவே மாட்டேன். இவ்வாறு சஞ்சய் தத் கூறினார்.

கருத்துகள் இல்லை: