சனி, 28 மே, 2011

Nano Car அடுத்த மாதம் இலங்கைக்கு நானோ ஏற்றுமதி-டாடா திட்டம்

டெல்லி: வரும் ஜூன் மாதம் முதல் நானோ காரை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

குறைந்த விலை என்ற அஸ்திரத்தை பயன்படுத்தி நானோ காரின் விற்பனையை பல மடங்கு அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் கணக்கு போட்டு செயல்பட்டு வருகிறது. விளம்பரங்கள், சலுகைககளால் உள்நாட்டு சந்தையில் நானோ காரின் விற்பனையை டாடா தூக்கி நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில், விற்பனையை மேலும் உயர்த்தும் நோக்கில் அண்டை நாடுகளுக்கும் நானோவை ஏற்றுமதி செய்ய டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் இலங்கைக்கு நானோவை ஏற்றுமதி செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முதலில் 500 நானோ கார்கள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக டாடா மோட்டார்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து, மாதத்திற்கு 200 நானோ கார்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மற்ற வெளிநாடுகளுக்கு நானோவை ஏற்றுமதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்தந்த நாட்டு பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப காரில் சில மாறுதல்கள் செய்ய வேண்டி உள்ளதே காலதாமத்திற்கு காரணம் என டாடா வட்டாரங்கள் கூறுகின்றன

கருத்துகள் இல்லை: