திங்கள், 6 டிசம்பர், 2010

ஆசிய பகுதியில் பாகிஸ்தானை மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதியது ரஷ்யா: விக்கிலீக்ஸ்

மாஸ்கோ, டிச.5- ஆசிய மண்டலத்தில் பாகிஸ்தானை மிகப்பெரிய அச்சுறுத்தல் நாடாக ரஷ்யா கருதியது என்ற தகவலை விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் விற்பதால் ஆசிய மண்டலத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் கருதினார். இதனால் 2003-ம் ஆண்டு முதல் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் விற்பதை ரஷ்யா நிறுத்திவிட்டதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இத்தகவலை ரஷ்யாவுக்கான அப்போதைய அமெரிக்கத் தூதர் வில்லியம் ஜெ பர்ன்ஸ் தனது ரகசிய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ஆயுதங்கள் இராக் நாட்டுக்கும் அல்-காய்தா இயக்கத்தினருக்கும் விநியோகிக்கப்படும் ஆபத்து இருப்பதாக ரஷ்யா கருதியது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: