செவ்வாய், 7 டிசம்பர், 2010

அமெரிக்காவின் முடக்கத்தைத் தவிர்க்க 355 மிரர் சைட்களை தொடங்கிய விக்கிலீக்ஸ்

வாஷிங்டன்: அமரிக்காவின் இரட்டை வேட, கபட நாடகங்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் விக்கிலீக்ஸ் இணையதளம், அமெரிக்கா தனது தளத்தை முடக்கிப் போடுவதிலிருந்து தப்ப 355 'மிரர்' தளங்களை துவக்கியுள்ளது.

இதுகுறித்து விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது நாங்கள் கடும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளோம். இன்டர்நெட் உலகிலிருந்து எங்களை முற்றிலும் முடக்கிப் போடும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். ஆனால் அதிலிருந்து தப்பவும், உலக மக்களுக்கு தொடர்ந்து எங்களது சேவையை தொடரவும், விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மிரர் தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதில் அமெரிக்க கடிதத் தகவல்கள் தொடர்பான அனைத்து பக்கங்களும் இடம் பெற்றுள்ளன.

மொத்தம் 355 மிரர் தளங்களில் எங்களது தகவல்களை வெளியிட்டுள்ளோம்.
  Read:  In English 
பல்வேறு நாடுகளில், பல்வேறு சர்வர்கள் மூலம் இந்த மிரர் தளங்களில் தனது பக்கங்களை வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ். இதன் மூலம் அமெரிக்காவின் முடக்க சதியை அது முறியடிக்க முனைந்துள்ளது.

மிரர் தளம் என்பது ஒரு இணையதளத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துத் தகவல்களும், அனைத்துப் பக்கங்களும் வேறு ஒரு தளத்திலும் காணும் வசதி தான். அதன்படி விக்கிலீக்ஸ் தளத்தின் அனைத்துப் பக்கங்களையும், தகவல்களையம் வேறு தளங்கள் மூலம் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: