செவ்வாய், 7 டிசம்பர், 2010

விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசான்ஞ்சே கைது!



விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசான்ஞ்சே லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளை பற்றிய ரகசியங்களையும், அந்த நாட்டு தலைவர்களை பற்றிய ரகசியங்களையும் அமெரிக்க தூதரகங்கள் திரட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தன. இந்த ரகசியங்களையும் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 2 பெண்கள் அளித்த புகாரின் பேரில் ஜூலியன் அசான்ஞ்சேக்கு எதிராக ஸ்வீடன் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது.இதற்காக சர்வதேச காவல்படையான இண்டர்போலின் உதவி நாடப்பட்டது.

இதற்கிடையில் 
அமெரிக்கா ஒருபுறம் அசான்ஞ்சேவை தேடி வந்தது
இந்நிலையில் அசான்ஞ்சேவின் வழக்கறிஞர் ஸ்டீபன்ஸ், அசான்ஞ்சேவை ஒப்படைக்குமாறு ஸ்வீடனிடம் இருந்து தகவல் கிடைத்திருப்பதாகவும், இது குறித்து காவல்துறையினர் தன்னைத் தொடர்புகொண்டு தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அவர் மேலும், அசான்ஞ்சே ஸ்காட்லாந்து யார்டு காவலர்களை சந்திப்பதற்கான இடம் மற்றும் நேரம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.   அவர் சரணடைவார் என்று கூறியிருந்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று லண்டனில் சரணடைந்த ஜூலியன் அசான்ஞ்சேவை போலீசார் கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: