இலங்கையில் முதன் முறையாக நாடு முழுவதும் யானைகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. மூன்று நாட்கள்நடைபெற்ற இந்த பணியில் வனத்துறை மற்றும் கிராமக்கள், தன்னார்வலர்கள் உட்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். யானைகளின் வழித்தடம் மற்றும் நீர்நிலைகளை தேடி வரும் பாதை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நாடு முழுவதும் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. யானைகளின் மொத்த எண்ணிக்கை ஐந்தாயிரம் முதல் ஆறாயிரம்வரையில் இருக்கலாம் என நம்புவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆண்டு தோறும் யானைகளால் தாக்கப்பட்டு 50 பேர் வரையில் பலியாவதாகவும், அதே போல் தந்ததிற்காக ஆண்டு தோறும் 250 யானைகள் வரை கொல்லப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் யானைகள் கணக்கெடுப்பு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக