ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜெ


தமிழர்களை அவமதித்த அமெரிக்க துணை தூதர்
மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜெ
முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனிபர் மெக்இன்டைருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

‘’அமெரிக்க துணை தூதர் மவுரீன் சாவ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியது, பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. அதில், `நான் டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரயிலில் சென்றேன்.
இந்த பயண நேரம் 24 மணி நேரம்தான். ஆனால், 72 மணி நேரம் ஆகியும், அந்த ரெயில் ஒரிசா போய்ச் சேரவில்லை. அதனால், எனது சருமம், தமிழர்களைப் போல அழுக்காகவும், கறுப்பாகவும் ஆகி விட்டது' என்று மவுரீன் சாவ் பேசியுள்ளார்.

இன வெறி கொண்ட இந்த பேச்சு, மிகவும் கண்டனத்துக்கு உரியது. இந்த கருத்து, ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கக் கூடியது என்று தங்களுக்கே தெரியும். எனவே, இந்த கருத்துகளை வாபஸ் பெற்றுக்கொண்டு, தமிழர்களைப் பற்றி இத்தகைய கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு மவுரீன் சாவை தாங்கள் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: