ஞாயிறு, 10 ஜூலை, 2011

தா.பா: ஆட்சி மாறியது. ஆனால் மந்திரிசபை மாற்றத்தைத் தவிர எதுவும் மாறலை.



அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டாலும் சொந்த சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதற்காக மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் ஜவாஹிருல்லா, அஸ்லாம் பாஷா ஆகியோருக்கு முஸ்லிம் சமூக அறிவுஜீவிகளும் தொழிலதிபர்களும் இணைந்து பாராட்டுவிழா எடுத்தனர். சென்னை எழும்பூர் மெரினா டவர்ஸில் நடந்த இந்த விழாவில், அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள தா.பாண்டியனின் பேச்சு கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

கூட்டத்தில் கலந்துகொண்ட இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன்,’’""அண்மைக் காலங் களில் அப்துல்சமது, அப்துல் லத்தீப்பிற்கு பிறகு சிறுபான்மை சமூகத்திற்காக அதிகம் குரல் கொடுப்பவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாதான். முஸ்லிம்கள் மத சிறுபான்மையினர். நாங்கள் (ஆதிதிராவிடர்கள்) மதத்துக்குள் சிறுபான்மையினர். அப்படிப் பார்த்தால் உங்களைப்போல நாங்களும் சிறுபான்மை யினர்தான். ஜவாஹிருல்லாவின் குரல்கள் இந்த சமூகத் திற்காக ஒலித்துக்கொண்டேயிருக்க வேண்டும்'' என்றார்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,’""தமிழகத்தில் நலிந்தவர்கள் பாதிக்கக்கூடிய செயல்பாடுகள் கடந்த ஆட்சியில் அதிகம் நடந்ததால்தான் அ.தி.மு.க. கூட்டணிக்குள் வந்தோம். மக்களுக்காக நாம் இணைந்து போராட வேண்டும்''’’என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தா.பாண்டியன்,’""தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்பதற்காகத் தான் நாமெல்லாம் இணைந்தோம். ஆட்சி மாறியது. ஆனால் மந்திரிசபை மாற்றத்தைத் தவிர எதுவும் மாறலை. அதுவும் இரண்டு முறை மந்திரி சபை மாற்றம் நடந்திருக்கிறது. அதைத்தாண்டி எதுவும் மாறலை. எந்த நோக்கத்திற்காக நாம் இணைந்தோமோ அந்த பணிகள் இன்னும் முடியாததால் நாம் தொடர்ந்து மக்களுக்காகப் போராட வேண்டும்''’’என்றார் சீரியசாக.

இறுதியில் ஏற்புரை நிகழ்த்திய ஜவாஹி ருல்லா,’""முஸ்லிம் மக்களுக்காக மட்டுமல்ல, அனைத்து சமூக மக்களுக்காகவும் மனித நேய மக்கள் கட்சி அர்ப்பணித்துக்கொள்ளும்''’’என்றார் உருக்கமாக.

விழா முடிந்து கூட்டம் கலைந்தபோதும் தா.பா.வின் பேச்சு அனைவரிடமும் எதிரொலித்தது. அதபோல போயஸ் கார்டனிலும் எதிரொலித்தது. இதன் விளைவு... பாளையங்கோட்டையில் 2-ந்தேதி நடந்தது தா.பா.வின் பேத்தி திருமணம். இதன் வரவேற்பு நிகழ்வு 7-ந்தேதி சென்னை திருமங்கலத்தில் நடக்க, இதில் கலந்து கொள்வதாக தா.பா.விடம் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். அதனால் ஜெ. வருவார் என அ.தி.மு.க. கொடிகளும் பேனர்களும் அமர்க்களப்படுத்தப் பட்டிருந்தன. ஆனால் கடைசி வரை வரவே இல்லை ஜெயலலிதா.

நேரடியாக அழைப்பு கொடுத்தபிறகும் ஜெயலலிதா வராதது, தா.பா.வை டென்ஷனாக்கியது. அதேபோல் நடிகர் சிவக்குமாரின் மகன் நடிகர் கார்த்தி வரவேற் பிற்கும் வருவதாகச் சொன்ன ஜெ., வராதது நடிகர் சூர்யா தரப்பிடம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கருத்துகள் இல்லை: