dinakaran.com - Neethimaan : தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து.. தேர்தல் நிதியை திருப்பியளிக்க அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தேர்தல் பத்திரங்கள் மூலம் முறைகேடு நடைபெறுவதாக 4 எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில் அதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. தேர்தல் பத்திரத்தை அறிமுகம் செய்ய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், ஐ.டி. சட்டத்தில் மேற்கொண்ட திருத்தங்கள் ரத்து செய்யப்படுகிறது.
மோடி அரசின் தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு புறம்பானது. தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது.தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மட்டுமே கருப்பு பணத்தை ஒழிக்க உதவாது. தேர்தல் பத்திரங்கள், தகவல் பெறும் உரிமை சட்டத்துக்கு எதிராக அமையும். நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. 2019 முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்களை வெளியிட எஸ்.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தோர் விவரங்களை மார்ச் 6-க்குள் தேர்தல் ஆணையத்தில் எஸ்பிஐ அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்கொடை கொடுத்தோர் விவரங்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் மார்ச் 31-க்குள் வெளியிட வேண்டும். தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதை நிறுத்த எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திர நிதியை அரசியல் கட்சிகள் திருப்பித் தர வேண்டும். தேர்தல் பத்திரங்களை யார் வாங்கினார்களோ, அவர்கள் பெயரில் வங்கியில் நிதியை திருப்பி செலுத்தவும் உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக