நடேச ஐய்யர் இலங்கைக்கு தான் தஞ்சையில் நடத்திவந்த வர்த்தக மித்திரன் பத்திரிகைக்கு சந்தா சேர்ப்பதற்காக 1919 ம் ஆண்டு வந்ததாக கூறப்படுவதும் கணபதிப்பிள்ளை அவர்கள் தனது நூலில் 1917 என்றும் சாரல்நடான்
1919 களில் எனவும் குமாரி ஜெயவர்த்தனா 1915 என்றும் ( பக்கம் 337) ம் பெட்டா பொலிஸ் தகவல் படி. சந்தா சேர்ப்பதற்காக நடேச அய்யர் 1915 ம் ஆண்டில் இலங்கை வந்ததாக (CNA police Report 26 -1922 - file number 14196/25) இலங்கை பொலிஸ் தெரிவித்தது.
"மலையக நிர்மாணப் சிற்பி கோ. நடேசய்யர் " என்ற நூலில் சாரல் நாடன் அவர்கள் பக்கம் 10 ல் " தனது வர்த்தக மித்திரன் பத்திரிகைக்கு சந்தா சேர்ப்பதற்காக நடேசய்யர் இலங்கை தீவிற்கு 1919 ம் ஆண்டு வருகை தந்தார்" என எழுதுகிறார்.
1918 ம் ஆண்டில் இருந்து 1922 ம் ஆண்டு வரையில் இலங்கைக்கு 3,05,567 தொழிலாளர்கள் வந்தனர் . 3,83,201 பேர் ஏனைய தொழில்களை செய்பவர்களாக இலங்கை வந்தனர். இவர்களில் பல ஆயிரம் பேர் தங்களின் வர்த்தக நலனுக்காக வந்தனர்.(Indians in SriLanka - page 198). ஆகவே நடேசையர் தனது பத்திரிகையை சந்தா முறையில் விற்பதற்கு இலங்கைக்கு வந்த ஏறத்தாழ மூன்று இலட்சம் பேர்களில் ஒருவராக வந்தார் என்பது திண்ணம்.
வேறு எவரின் விசேட அழைப்பின் பேரிலோ அல்லது அரசாங்க அதிதியாகவோ இலங்கை வரவில்லை.
1930 ம் ஆண்டுவரை இந்தியாவில் இருந்து இலங்கை வர எவ்வித கட்டுப்பாடும் இல்லை என்பதால்
நினைத்தவர்கள் யாவரும் இலங்கைக்கு வரவும் வர்த்தகத்தில் ஈடுபடவும் ( நாட்டுக் கோட்டை செட்டியார்கள்) ஆயிரக்கணக்கான இந்தியர்களினால் நிகழ்த்த முடிந்தது.
இதுவே பின்னர் , 1930 களில் இந்தியர்கள் வெளியேற வேண்டும் என்கிற குணசிங்கா அவர்களின் யூனியனின் கோரிக்கைக்கு வலுவூட்டும் காரணிகளில் ஒன்றாக அமைந்தது.
1925 களில் ஓர் சராசரி தோட்ட தொழிலாரின் மாதந்தோறும்
செலவுக்கு தேவைப்பட்ட பணம் 10. 74 சதமாகவே இருந்தது.
நடேசையர் 1915 களில் நடத்திவந்த வர்த்தக மித்திரன் பத்திரிகைகான வருட சந்தா இலங்கை ( சிலோன்) , மற்றும் இந்தியாவில் 05 ரூபா.
அவர் நடாத்திய வர்தக வகுப்புகளுக்கு ஒருவருட சந்தா 12 ரூபா அறவிட்டார். ( தஞ்சையில்). போவற் சஞ்சிகையின் வருடாந்திர சந்தா 06 ரூபா.எனவே சந்தா பெற்று வர்த்தகம் செய்வதிலும் வர்த்தகம் சம்மந்தமாக நூல்கள் எழுதி விற்பனை செய்வதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டார்.
கணக்கு பதிவு, வங்கிகளும் நிர்வாகமும், வியாபார பயிற்சி நூல், பம்புகளும் அவற்றை உபயோகித்தலும், இன்சூரன்ஸ், ஒயில் என்ஜின்கள் என நூல்களை
எழுதி விற்றார்.
அக்காலத்திலே இத்தகைய வர்த்தக நூல்களை எழுதுவதென்பது பெரும் வியப்புக்குரியது.
இலங்கையில் , தேவநேசன், தேசபக்தன், உரிமை போர், சுதந்திரபோர், The citizen, The forward, The estate labourer, Indian opinion எனும் பல பத்திரிகைகளை நடாத்தினார்.1920 முதல் 1947 வரை . எனினும் எந்த பத்திரிகையும் நீடித்து நிலைக்கவில்லை. குறுகிய காலங்களில் தத்தமது வெளியீடுகளை நிறுத்திக் கொண்டது.
ஆயின் கீழே காட்டப்பட்ட பல பத்திரிக்கைகளுக்காக கட்டப்பட்ட சந்தாக்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க முடியவில்லை.
1931 ல் நடேசய்யர் மலையகதோட்ட தொழிலாளர்களின். நலன் பெறுவதற்காகவும் தனது தொழில் சங்க நடவடிக்கைக்காகவும் மலையகத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட All Ceylon Estate
Labour Union அட்டனை தலைமையிடமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1935 ல் அவர் தலைமையில் நடாத்திய போராட்டத்தில் ஏறத்தாழ 5000 அங்கத்தினர்கள் கலந்துக் கொண்டனர்.
ஆயின் சந்தா அங்கத்துவம் இல்லாது தொழிலாளர் சங்கம் நடத்துவது எங்கனம்...?
1947 ம் ஆண்டுகளில் பொது தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்த போதும் தொழிலாளர்கள் நலன் பேனுவதில் குறியாக இருந்த நடேசய்யர் மண்டபம் நிருவாகத்திற்கு அதுபற்றி எழுதிய கடிதத்தில் Rubber stamp குத்தி இருப்பதை நோக்குகின்ற போது நூல்களின் ஆசிரியர் என்று இருந்ததே ஒழிய அவரின். பின்னால் நின்ற தொழிலாளர்களின் நன்மைக்காக அல்லது குறியீடாக வேனும் தனது அல்லது தொழிலாளர் நலன். பேனும் எந்தவித மான சொற் தொடர்களும் பதியப்படவில்லை என்பதை உற்று நோக்கினால்
தெளிவு பிறக்கும்.
எவ்வாறாயினும்,
நடேச ஐயர் முதன் முதலாக சந்தா சேகரிப்பதை அறிமுகம் செய்திருந்தாலும், அவர் காட்டிய பாதையை( திறம்பட? ) நடத்திச் செல்லுகின்ற பெருமை ,இ.தொ .கா வையே சாரும்.
அதே போன்று தொழிலாளர்களுக்காக நடாத்தப்பட்ட காங்கிரஸ் பத்திரிகை இன்று 60 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து
வெளி. வருவதையும் இலவசமாகவே வழங்கப்படுவதையும். கவனத்தில் கொள்ள வேண்டும் .
இந்த சிறிய கட்டுரை எவருக்கும் வக்காலத்து வாங்குவது அன்றியும்
தூற்றுவதோ அல்ல. புதிய கோணத்தில் நடேச ஐய்யரை அறிமுகம் செய்து வைப்பதே பிரதான நோக்கமாகும். அதிலும் இந்த கட்டுரை பகுதி சந்தாவை மலையக பகுதிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட செயலை
வெளிப்படுத்துவதாகும்.
கீழே தரப்பட்ட தகவல்களை
கவனமாக வாசிப்பதன் மூலம்
கட்டுரை நியாயமானது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். '
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக