ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம்.. இதுவரை 112 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் .

 tamil.oneindia.com -  Shyamsundar :  சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தமிழ்நாட்டில் கவனம் பெற்று வரும் நிலையில் இந்த திட்டத்தில் அடுத்த கட்டமாக முக்கியமான சில பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம் என்று திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 2021 ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்த திட்டம் அமலுக்கு வந்தது.
பயனாளிகள் இல்லங்களுக்கு சென்று மருந்து சேவைகள் வழங்கும் இந்த திட்டம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு பொதுவான நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இந்த மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகின்றது.



தமிழ்நாடு முழுக்க திட்டம்: தமிழ்நாடு முழுக்க இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. சிறுநீரக பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கு மருந்து வழங்குதல் போன்ற பல்வேறு மருத்துவ சேவைகள் இந்த திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. நேரடியாக வீட்டிற்கே சென்று நோயாளிகளை கண்காணிப்பது, அவர்களுக்கு தவறாமல் இலவச மருந்து வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இந்த திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை தமிழ்நாட்டில் 112 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த திட்டம் மூலம் பயன் அடைந்துள்ளனர்.
Makkalai Thedi Maruthuvam scheme camps to come soon in various factories

சூப்பர் யோசனை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தமிழ்நாட்டில் கவனம் பெற்று வரும் நிலையில் இந்த திட்டத்தில் அடுத்த கட்டமாக முக்கியமான சில பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி முதல் கட்டமாக 711 தொழிற்சாலைகளில் உள்ள 8.53 லட்சம் பணியாளர்களுக்கு நடத்தப்பட உள்ளது.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்றாநோய் பரிசோதனைகளை முதல் கட்டமாக 711 தொழிற்சாலைகளில் உள்ள 8.53 லட்சம் பணியாளர்களுக்கு நடத்தப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தனியார் தொழிற்சாலை உட்பட எல்லா இடங்களிலும் இதற்கான முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன. இந்த நிலையில்தான் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தமிழ்நாட்டில் கவனம் பெற்று வருகிறது.

எல்லோரும் தமிழில் குறுஞ்செய்தி அனுப்புங்க.. AI உலகிலும் தமிழ் மொழி ஆள வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் எல்லோரும் தமிழில் குறுஞ்செய்தி அனுப்புங்க.. AI உலகிலும் தமிழ் மொழி ஆள வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

அதிர்ச்சி தரும் தகவல்கள்: இதில் செய்யப்பட்ட சோதனையில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன. 2 ஆண்டுகளில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 55.1 லட்சம் புதிய உயர் இரத்த அழுத்த நோயாளிகள் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். இந்த திட்டம் இல்லை என்றால்.. இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டே இருக்க மாட்டார்கள். இந்த சோதனை இல்லை என்றால் இவர்களின் ரத்த அழுத்தம் உச்சத்திற்கு போக.. இவர்கள் பாதிப்பு அடைய அதிக வாய்ப்புகள் உள்ளன.

31.53 லட்சம் சர்க்கரை நோயாளிகள் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். இந்த சோதனை இல்லையென்றால் சர்க்கரை வியாதி மோசம் அடைந்த பின் இவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. 26.15 லட்சம் நோயாளிகள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கணக்கெடுப்பில் இதுவரை தமிழ்நாட்டில் 112 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த திட்டம் மூலம் பயன் அடைந்துள்ளனர்.

அதிக அளவில் சோதனை: அதிக அளவில் மக்களுக்கு நேரடியாக சோதனைகள் செய்து, மருத்துவர்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. நேரடியாக மருத்துவம் இவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் ரூ.1.50 கோடி செலவில் ஐந்து மாவட்டங்களுக்கான நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப் பிரிவு சேவை வாகனங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.

மாஸ்! உச்சபட்ச மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்.. திமுக அரசின் திட்டத்தால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை!மாஸ்! உச்சபட்ச மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்.. திமுக அரசின் திட்டத்தால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை!

தேசிய நலவாழ்வுக் குழுமத்தில், பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் 2021-22-ஆம் ஆண்டு கள ஆய்வறிக்கையின்படி, தவிர்க்கக்கூடிய பார்வை இழப்பிற்கான காரணிகள் மற்றும் பார்வை குறைபாட்டிற்கான முக்கிய காரணிகளில் முதியோர்களுக்கு ஏற்படும் கண்புரை ஒன்றாகும்.

இதை களையும் பொருட்டு, இப்பகுதிகளில் அதிகமான கண்புரை அறுவை சிகிச்சை முகாம்கள் நடத்துவதற்கும், நோயாளிகளை அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதற்கும் வசதியாக, மாவட்டத்திற்கு ஒரு நடமாடும் கண் மருத்துவப் பிரிவிற்காக புதிதாக வாகனம் வழங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: