tamil.oneindia.com - Nantha Kumar R : டெல்லி: சோனியா காந்தி தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று ராஜ்யசபா எம்பியாக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் தான் தற்போது அது உறுதியாகி உள்ளது. அதன்படி இன்று சோனியா காந்தி ராஜ்யசபா எம்பி பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 25 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற பணிகளை தொடங்கி விட்டன.இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி போட்டியிடமாட்டார் என்ற தகவல்கள் வெளியாகின. உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை எனவும், மாறாக அவர் ராஜ்யசபா எம்பியாக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தான் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சோனியா காந்தி தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று ராஜ்யசபா எம்பியாக இன்று (புதன்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தறஇந்தியாவில் 13 மாநிலங்களில் இருந்து தேர்வாகி இருந்த 56 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் 2 மற்றும் ஏப்ரல் 3ம் தேதிகளில் முடிவுக்கு வர உள்ளது.
இதையடுத்து அந்த ராஜ்யசபா எம்பி பொறுப்புகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்துள்ளது. பிப்ரவரி மாதம் 27 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் என்பது தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய பிப்ரவரி மாதம் 15ம் தேதி கடைசி நாளாகும்.
‛கண்வைத்த சிபிஐ’.. வயநாடு தொகுதியை இழக்கும் ராகுல் காந்தி? கூட்டணியால் காங்கிரசுக்கு புது பிரச்சனை ‛கண்வைத்த சிபிஐ’.. வயநாடு தொகுதியை இழக்கும் ராகுல் காந்தி? கூட்டணியால் காங்கிரசுக்கு புது பிரச்சனை
இந்நிலையில் தான் இன்றைய தினம் சோனியா காந்தி ராஜ்யசபா எம்பி பதவியாகும் நோக்கத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார். அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக மனுத்தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் அவர் இன்று மனுத்தாக்கல் செய்ய உள்ளார்.
ராஜஸ்தானை பொறுத்தமட்டில் இப்போது 3 ராஜ்யசபா எம்பிக்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. அந்த மாநில எம்எல்ஏக்களின் அடிப்படையில் பார்த்தால் பாஜகவுக்கு 2 எம்பிக்கள் கிடைக்கும். மாறாக காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்பி கிடைப்பது உறுதியாகி உள்ளது. அந்த வாய்ப்பில் தான் சோனியா காந்தி ராஜஸ்தானில் காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்பியாக இன்று வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார்.
சோனியா காந்தி இன்று மனுத்தாக்கல் செய்யும்போது அவருடன் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மகன் ராகுல் காந்தி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வார்த்தையை விட்ட ராகுல்.. ‛இந்தியா’ கூட்டணியில் நிதிஷ் குமார் வெளியேற இதுதான் காரணம்! நடந்தது என்ன? வார்த்தையை விட்ட ராகுல்.. ‛இந்தியா’ கூட்டணியில் நிதிஷ் குமார் வெளியேற இதுதான் காரணம்! நடந்தது என்ன?
மேலும் தற்போது சோனியா காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியின் எம்பியாக உள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தி (அமேதி தொகுதி) உள்பட அனைத்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களும் தோல்வியடைந்த நிலையில் சோனியா காந்தி மட்டுமே வெற்றி பெற்றார். இந்த தொகுதி என்பது காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியாகும்.
அதாவது இந்த தொகுதியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு கடந்த 2004ம் ஆண்டு முதல் சோனியா காந்தி போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். 2004, 2009, 20014, 2019 என நான்கு முறை இந்த தொகுதியில் அவர் வென்றார். தற்போது அந்த தொகுதி எம்பியாக இருக்கும் சோனியா காந்தி வரும் தேர்தலில் பிரியங்கா காந்தியை அங்கு களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக