ராதா மனோகர் : மதராஸ் மாகாண முதலமைச்சர் ராஜகோபாலச்சாரி திரு .ஜி ஜி பொன்னம்பலத்தின்
கோரிக்கையை ஏன் புறந்தள்ளினார்?
மலையக வாக்குகளின் பலத்தை வைத்து பிரிட்டன் இந்தியா அமெரிக்காவுக்கு
சவால் விட்ட இடதுசாரிகளின் வரலாறு ஏன் இதுவரை மறைக்கப்படுகிறது?
இலங்கையில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி நிலவிய காலத்தில்,
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் சுதந்திர இயக்கம் மிகவும் தீவிரமாக வளர்ந்தது
இந்த சுதந்திர உணர்வானது 1888 இல் முதல் சுதந்திரத்திற்கான இயக்கமாக இலங்கை தேசிய சங்கம் உருவானது
இதை தொடர்ந்து 1917 இல் சிலோன் சீர்திருத்த கழகம் உருவானது
மேற்கண்ட அமைப்புக்களின் பின்னால் 1919 டிசம்பர் 11 இல் இலங்கை தேசிய காங்கிரஸ் Ceylon National Congress ஒரு அரசியல் கட்சியாக உருவானது
இதுதான் இலங்கையில் உருவான முதல் அரசியல் கட்சியாகும்.
இதன் நிறுவன தலைவராக சேர் பொன்னம்பலம் அருணாசலம் பணியாற்றினார்
அக்டோபர் 1920 இல் நடந்த முதலாவது கூட்டத்தில் சர் ஜேம்ஸ் பீரிஸ் இதன்
தலைவராக தெரிவு செய்யப்பட்டார்,
இவருக்கு பின்பு தொடர்ந்து எப்.ஆர். சேனநாயக்க,
டி.எஸ் சேனநாயக்க, டி.பி.ஜயதிலக, ஈ.டபிள்யூ பெரேரா,
சி.டபிள்யூ.டபிள்யூ.கண்ணங்கர, பட்ரிக்
டி சில்வா குலரத்ன, எச்.டபிள்யூ.அமரசூரிய, டபிள்யூ.ஏ.டி.சில்வா, ஜோர்ஜ்
ஈ.டி.சில்வா மற்றும் எட்வின் விஜேயரத்ன ஆகியோர் தொடர்ந்து தலைவர்களாக
பணியாற்றினார்கள்..
1943 இல் இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியின் மெதுவான போக்கை விமர்சித்து
பூரண சுதந்திரத்திற்கான தேவை இருப்பதாக திரு டி எஸ் சேனநாயக்க கருதி
இலங்கை தேசிய காங்கிரசில் இருந்து பிரிந்த ஏனைய பல தலைவர்களோடு டி எஸ்
சேனநாயக்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கினார்கள்.
1934 இல் திரு எஸ் டபிள்யு ஆர் டி பண்டாரநாயக்கா ஏ இ குணசிங்க
(நடேசஅய்யரின் அரசியல் குரு) ஆகியோரால் நிறுவப்பட்ட தீவிர சிங்கள இனவாத
போக்குடைய சிங்கள மகாஜன சபையும் 1946 இல் டி எஸ் சேனநாயக்க தலைமையில்
இருந்த ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டது.
இலங்கை தேசிய காங்கிரசில் இருந்து ஐக்கிய தேசிய கட்சி உருவானபின்பு
தமிழர்கள்களுக்கான கட்சியாக 1944 இல் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் அகில
இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை நிறுவினார்
இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே ஒரு சம அதிகாரம்
இருத்தல் வேண்டும் என்ற அடிப்படையில் சமபங்காக 50 % நாடாளுமன்ற ஆசனங்களை
கேட்டார்
அப்போது டி எஸ் சேனநாயக்காவின் அமைச்சரவையில் உள்நாட்டு விவகார அமைச்சராக
இருந்த திரு அருணாசலம் மகாதேவா அவர்கள் 40 க்கு 60 என்ற கருத்தை
முன்வைத்தார்
அதாவது இலங்கையில் உள்ள அத்தனை சிறுபான்மை மக்களுக்கும் 40 வீதமான
நாடாளுமன்ற ஆசானங்களை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்ற இந்த முன்மொழிவை
ஏற்று கொண்ட திரு ஜி ஜி பொன்னம்பலம் அவர்கள்,
இது பற்றி மலையக மக்களை பிரதிநிதித்துவம் வகிக்கும் இலங்கை இந்திய
காங்கிரசின் தலைவரான திரு அப்துல் அஸீஸ் அவர்களோடு பேச்சு வார்த்தை
நடத்தினார்
ஜி ஜி பொன்னம்பலத்தின் இந்த கோரிக்கையை எடுத்த எடுப்பிலேயே திரு அப்துல்
அஸீஸ் உதறி தள்ளினார்
அப்போது அவர் இலங்கை முழுவதையும் ஒரு கம்யூனிஸ்டு அரசின் கீழ் கொண்டுவர
முடியும் என்ற அபார நம்பிக்கையில் இருந்தார்.
இதன் பின் அப்போது இலங்கைக்கு வருகை தந்திருந்த சென்னை மாகாண முதல்வராக
இருந்த திரு ராஜகோபாலாச்சாரியை மலையகத்தில் வைத்து சந்தித்து இந்த
கோரிக்கைக்கு இந்திய அரசின் ஆதரவு வேண்டும் என்று கோரினார்
இதில் திரு ராஜகோபாலாச்சாரி ஆர்வம் காட்டவில்லை
உங்களின் இந்த கோரிக்கை ஒருவேளை நிறைவேறினால் கூட இது காலப்போக்கில்
கைவிடப்பட கூடிய சாத்தியம் உள்ளது எனவே இதை கைவிடுங்கள்
நாம் பின்பு இது பற்றி யோசித்து ஆவன செய்யலாம் என்று ஜி ஜி
பொன்னம்பலத்திடம் கூறினார்
திரு ராஜகோபாலச்சாரி அவர்கள் மலையகத்திருக் வரும் முதல் கொழும்பில் வந்து
இறங்கிய உடனே ஒரு சம்பவம் நடந்தது
அப்போது தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் வீச்சை
கொழும்பிலும் ராஜகோபாலாச்சாரி எதிகொண்டார்
கொழும்பில் இருந்த திராவிட இயக்கங்கள் ராஜாஜிக்கு கறுப்புக்கொடி
காட்டிஆர்ப்பாட்டம் செய்தனர்
இந்தி ஆதிக்கத்திற்கு எதிரான கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களை கொழும்பில்
எதிர்பார்க்காத ராஜகோபாலாச்சாரி அவர்கள் இது போன்ற பல கருப்புகொடிகளை
நான் மதராஸிலேயே கண்டுள்ளேன்
இது எனக்கு ஒரு பெரிய விடயம் அல்ல. என்று கூறினார்
இந்த சம்பவத்தின் பின்னணியில்தான் திரு ஜி ஜி பொன்னம்பலத்தின் இலங்கை
தமிழர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி ஒதுக்கீட்டு
கோரிக்கையையும் திரு ராஜகோபாலச்சரி தவிர்த்து இருக்கிறார் என்று கருதுகிறேன்.
மகாத்மா காந்தியும் திரு ராசகோபாலாச்சாரியும் ஏறக்குறைய ஒரேவிதமாக
சிந்திக்கும் சம்பந்திகள்
காந்தியவர்கள் அம்பேத்கர் அவர்களின் தலித்துகளுக்கான ரிசர்வ் தொகுதி
கோரிக்கைக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து அம்பேத்கரின்
கோரிக்கையினை முறியடித்தவர்
ஒருவேளை உண்ணாவிரதம் காரணமாக காந்திக்கு ஏதும் நேர்ந்தால் இலட்சக்கணக்கான
தலித்துக்குள் உயிரோடு கொழுத்தப்பட்டிருப்பார்கள்
இதுதான் காந்தி அம்பேத்காரை பணிய வைக்க செய்த பிளாக் மெயில் அரசியல்
இந்தியாவில் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கான தொகுதி ஒதுக்கீடு பற்றிய
காந்தியின் அரசியலும் இலங்கை சிறுபான்மை இனங்களுக்கான தொகுதி ஒதுக்கீடு
பற்றிய ராஜகோபாலச்சாரியின் அரசியலும் ஒரே விதமான சிந்தனையின்
வெளிப்பாடுதான்
காந்தி நேரு போன்ற இந்திய தலைவர்களோடு மிக நெருங்கிய தொடர்பில் இருந்த
ராஜகோபாலாச்சாரியின் ஆதரவு தனது கோரிக்கைக்கு மிகவும் வலு
சேர்த்திருக்கும் என்று திரு ஜி ஜி பொன்னம்பலம் கருதியதில் வியப்பில்லை.
குறைந்த பட்சம் மலையக தலைவர்களையாவது இந்த கோரிக்கைக்கு ஆதரவாக
இருக்குமாறு திரு ராஜகோபாலாச்சாரி வலியுறுத்த கூடும் என்று அவர்
எண்ணியிருக்கலாம்.
எவர் போட்ட சாபமோ திரு ஜி ஜி பொன்னம்பலத்தின் அத்தனை முயற்சிகளையும்
இந்திய அரசும் மலையக தலைவர்களுக்கும் புறந்தள்ளினார்கள்.
இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தால் இவர்கள் இங்கும் இந்திக்கு எதிரான ஒரு
நிலையை மேற்கொள்வார்கள் என்று கருதியிருக்கலாம்
அப்போது இந்திய அரசில் மிகப்பெரும் செல்வாக்கோடு இருந்தவர் திரு ராஜகோபாலாச்சாரி.
ஒரு புறம் இடதுசாரிகளின் கம்யூனிச கனவும்,
மறுபுறத்தில் ராஜகோபாலாச்சாரியின் தமிழ் விரோத போக்கும் சேர்ந்து ஒரு வரலாற்று அவலத்திற்கு வழி வகுத்தது.
1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றது
பெரும்பான்மையான் சிங்கள மக்களையும் கணிசமான வடக்கு கிழக்கு மக்களையும் பிரதிநித்துவம் செய்யும் 42 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு சில சுயேட்சை அங்கத்தினர்களுடைய ஆதரவோடு டி எஸ் சேனநாயக்க ஆட்சியை அமைத்தார்.
மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 101 ஆகும்.
எக்கச்சக்கமான மலையக மற்றும் இந்திய இலங்கை வம்சாவளி தமிழர்களின் வாக்கு பலத்தால் பல சிங்கள இடதுசாரி எம்பிக்கள் தெரிவாகி இருந்தனர்.
எதிர்க்கட்சி வரிசையில் இடது சாரிகளும் அத்தனை தமிழ் கட்சி
உறுப்பினர்களும் அமர்ந்தனர்.
பிரித்தானியா இந்தியா அமேரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளின் ஏகோபித்த ஆதரவோடு ஐக்கிய தேசிய கட்சியின் அரசு அமைந்தது.
இலங்கையில் சுதந்திர உணர்வு கிளர்ந்து எழுந்த சூழ்நிலையில் இலங்கையின் சுதந்திர இயக்கமாக கருதப்பட்ட ஐக்கிய தேசிய கட்சிக்கு பக்கபலமாக நின்று சுதந்திர இலங்கையின் முதல் அரசில் மலையக எம்பிக்கள் பங்கு பற்றி இருந்தால் ஒருவேளை அவர்களின் வாக்குரிமை பறிபோய் இருக்காது.
மறு புறத்தில் கம்யூனிஸ்டு அரசை நிறுவுவோம் என்ற முழக்கத்தோடு
எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த இடதுசாரிகளயோடு அமர்ந்த திரு ஜி ஜி பொன்னம்பலம் நிலையை புரிந்து கொண்டார்
சிறுபான்மை மக்களை நிரந்தரமாக சிங்கள மக்களுக்கு எதிராகவும் இந்தியா பிரித்தானிய போன்ற மேற்கு நாடுகளுக்கு எதிராகவும் கொண்டு போய்
நிறுத்துவது ஆபத்தானது என்று கருதினார்.
இதன் காரணமாக தனது முடிவை மாற்றி கொண்டு டி எஸ் சேனையாக அரசுக்கு ஆதரவளித்தார்
அந்த அரசில் சேர்ந்து கைத்தொழில் மீன்பிடி துறை அமைச்சரானார்.
இந்த தேர்தலில் இந்திய மலையக மக்களின் வாக்கு பலத்தால் எக்கச்சக்கமான சிங்கள இடதுசாரிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர் .
பெரும்பான்மை சிங்கள மக்களிடம் எடுபடாத இடதுசாரிகளின் பிரசாரம் மலையக மக்களிடம் தாராளமாக எடுபட்டது.
இவர்களின் வாக்குகளை கம்யூனிஸ்டு வாக்குகளாக இலங்கை சிங்கள மக்களாலும் இந்தியா பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகளாலும் கருதப்பட்டது அது உண்மையும் கூட.
இவற்றை எல்லாம் நன்றாக உணர்ந்த எஸ் ஜெ வி .செல்வநாயகமோ மறுபுறத்தில் தனிக்கட்சி தொடங்குவதற்கு வாய்ப்பை தேடிக்கொண்டிருந்தார்
ஜி ஜி பொன்னம்பலம் அரசில் சேர்ந்து அமைச்சராகி விட்டார் . மலையக மக்களின் வாக்குரிமையை பறித்து விட்டார் . அவர் ஒரு துரோகி என்று கூறி தனது அரசியல் கணக்கை தொடங்கினார்
மலையக மக்களின் வாக்குரிமை பறிபோனதன் உண்மை காரணத்தை மிக நன்றாக தெரிந்தும் தனது சுயநல அரசியலுக்காக இந்த விடயத்தை தூக்கி ஜி ஜி பொன்னம்பலத்தின் தலையில் போட்டார்.
1949 இலங்கை தமிழரசு கட்சி என்ற கட்சியை தொடங்கினர்
இதிலும் கூட ஒரு தில்லுமுல்லு நடந்தது,
தமிழில் தமிழரசு கட்சி என்றும் ஆங்கிலத்தில் Federal Party பேடேறல்
பாட்டி என்றும் இருவேறு பகுதிகளுக்கு இருவேறு பெயர்களை வைத்துக்கொண்டார்
SJV .செல்வநாயகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக